தல தீபாவளி.. தல போல வருமா பாட்டு இப்படித்தான் உருவாச்சா? சீக்ரெட் உடைத்த இயக்குநர் சரண்

நடிகர் அஜீத் திரை வாழ்க்கையில் அவரது ரசிகர்களை இன்று மட்டுமல்ல, என்றும் குஷிப்படுத்திக் கொண்டிருக்கும் பாடல்கள் இரண்டு. இரண்டுமே அட்டகாசம் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களே. ஒன்று தலபோல வருமா தீம் பாடலும்.. மற்றொன்று தீபாவளி.. தல தீபாவளி பாடலும் ஆகும்.

இயக்குநர் சரண் அஜீத்தை வைத்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார். அதிலும் ‘அ’ வரிசையில் அமைந்த அமர்க்களம், அட்டகாசம், அசல் ஆகிய மூன்று படங்களுமே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது மட்டுமல்லாமல் அஜீத்துக்கு ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கிக் கொடுத்தது என்றே சொல்லலாம்.

இதில் அமர்க்களம் படத்தில் இடம்பெற்ற சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் பாடல் ஹிட்டானது. மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு எப்படி சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.. என்ற பாடல் ரஜினியை புகழ்ந்து எழுதப்பட்டது போல அஜீத்துக்கும் புகழ்ந்து எழுதப்பட்டது தான் தல போல வருமா பாடல்.

சாதாரணமாகவே சினிமாவில் விஜய்க்கும், அஜீத்துக்கும் இன்று வரை போட்டி நிலவும் நிலையில் 2000 ஆண்டுகளின் தொடக்க காலங்களில் இருவருமே மிகப்பெரிய ஸ்டாராக உருவாகிக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் பஞ்ச் டயலாக்குகளையே பாட்டில் வைத்து இருவருமே யார் பெரிய ஸ்டார் என்பதை தங்களது பாட்டுக்களில் வைத்து ரசிகர்களை வைப் ஏற்றி வந்தனர்.

அவ்வாறு அட்டகாசம் படத்தில் இடம்பெற்ற இமயமலையில் என் கொடி பறந்தால் உனக்கென்ன.. என்ற பாடல் மறைமுகமாக அப்போது விஜய்யை தாக்கி எழுதப்பட்ட பாடலாகவே இருக்கும். அதேபோல் விஜய்யும் சில பாடல்களில் அஜீத்தை மறைமுகமாக தாக்கி எழுதப்பட்ட பாடல்களில் நடித்திருப்பார். அந்த வகையில் அஜீத் புகழ் பரப்பும் வகையில் எழுதப்பட்ட பாடல்தான் தல போல வருமா பாடல்.

அட்டகாசம் படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலுக்கு முதலில் பரத்வாஜின் இசையில் இயக்குநர் சரணே டம்மி வரிகளை எழுதியிருக்கிறார். பின்னர் வைரமுத்துவிடம் இந்த வரிகளைக் காட்டிய பிறகு தல போல வருமா என்ற வரியை மட்டும் வைத்துவிட்டு மீதப் பாடலை எழுதியிருக்கிறார். இயக்குநர் சரண் அஜீத் ரசிகர்களை மனதில் வைத்தே இந்த வரிகளை எழுதியதாகக் கூறுகிறார்.

பூவே உனக்காக படத்துக்கு முன் அஜீத்துக்கு ஹிட் கொடுக்க நினைத்த இயக்குநர் விக்ரமன்.. நழுவிப் போன சூப்பர்ஹிட் படம்

அதேபோலத்தான் இந்தப் படத்தில் இடம்பெற்ற தெற்கு சீமையிலே என்னப் பத்தி கேளு பாடலும். இந்தப் பாடலையும் வைரமுத்துவே எழுதியுள்ளார். அட்டகாசம் படம் தீபாவளி ரிலீஸ் என்று உறுதி செய்யப்பட்டிருந்தது. எனவே அப்போது தீபாவளி பாடலை ஒன்று சேர்க்கலாம் என எண்ணிய போது தல தீபாவளி என்று போட்டால் எப்படி இருக்கும் என பாட்டெழுத அப்பாடல் சூப்பர் ஹிட் ஆகி இன்றுவரை தீபாவளி பண்டிகை நாட்களில் இல்லங்கள் தோறும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. தீனா படத்தில் தல என ரசிகர்கள் செல்லப்பெயர் வைக்க அட்டகாசம் பாடல் அதை உயர்த்தியது என்றே சொல்லலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...