தமிழில் 10 படங்கள் மட்டுமே.. கணவருடன் இணைந்து தொழிலதிபரான நடிகை ஸ்வப்னா..!

தமிழில் 10 படங்களும் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஆகிய மொழிகளில் சில படங்களும் நடித்த நடிகை ஸ்வப்னா திருமணமான உடன் கணவருடன் சேர்ந்து தொழிலதிபராகியுள்ளார். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த விவசாய குடும்பத்தில் பிறந்தவர் ஸ்வப்னா. இவரது குடும்பம் சென்னையில் குடிபெயர்ந்ததை அடுத்து சென்னையில் தான் அவர் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தார்.

கல்லூரியில் படிக்கும்போதே அவர் நடனம் நாட்டியம் ஆகியவற்றையும் கற்றுக் கொண்டார். 1981 ஆம் ஆண்டு பிரேம்நசீர் நடித்த சங்கர்ஷம் என்ற மலையாள திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார். இந்த படம் நல்ல வரவேற்பு பெற்றதை அடுத்து தெலுங்கில் ஸ்வப்னா என்ற படத்திலும் கன்னடத்தில் அம்ரீஷ் நடித்த படத்திலும் நடித்தார்.

கட்சிக்காக பணம் கொடுத்த நடிகை லதா…. திருப்பி எம்ஜிஆர் செய்த உதவி..!!

தமிழ் திரையுலகமும் ஸ்வப்னாவை வரவேற்றது. கலைஞானம் இயக்கத்தில் உருவான நெல்லிக்கனி என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர், அதன் பிறகு கமல்ஹாசன் உடன் கடல் மீன்கள் என்ற திரைப்படத்தில் நடித்து பிரபலமானார்.

எஸ்ஏ சந்திரசேகர் திரைக்கதை வசனம் எழுதிய சாதிக்கொரு நீதி என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த ஸ்வப்னா, அதன்பிறகு எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் உருவான நெஞ்சிலே துணிவிருந்தால் என்ற படத்தில் விஜயகாந்த் ஜோடியாக நாயகியாக நடித்தார்.

பாலியல் தொழிலாளி கதாபாத்திரம்… துணிந்து நடித்த நடிகைகள்..!!

இதனை அடுத்து அவர் கமல்ஹாசன் நடிப்பில் பாரதிராஜா இயக்கத்தில் உருவான திகில் படமான டிக் டிக் டிக் என்ற படத்தில் நடித்தார். அதன் பிறகு கே பாலசந்தரின் அக்னி சாட்சி திரைப்படத்தில் சரிதா உடனும் மணிவண்ணன் இயக்கிய 24 மணி நேரம் திரைப்படத்திலும் நடித்தார். மோகன் நடித்த ருசி என்ற திரைப்படத்தில் நடித்ததற்கு பிறகு ஸ்வப்னா தமிழில் நடிக்கவில்லை.

தமிழில் நடிக்காவிட்டாலும் தெலுங்கில் அவர் பல படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். அதேபோல் ஹிந்தி மற்றும் மலையாளத்தில் ஏராளமான படங்கள் நடித்தார். இந்த நிலையில் கடந்த 1990 ஆம் ஆண்டு ராமன் கண்ணா என்பவரை ஸ்வப்னா திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் அவர் நடிப்பில் இருந்து முழுவதுமாக விலகி வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சி நடத்தும் சஞ்சனி என்டர்டைன்மென்ட் என்ற நிறுவனத்தை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

16 வயதில் சினிமாவில் அறிமுகம்.. 17 வயதில் எம்ஜிஆருக்கு ஜோடி.. நடிகை மஞ்சுளாவின் திரைப் பக்கங்கள்..!!

இந்நிறுவனம் அமெரிக்கா இங்கிலாந்து உள்பட பல நாடுகளில் வெற்றிகரமாக பல நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளது. திருமணத்திற்கு பின்னர் மிகப்பெரிய தொழிலதிபராகி கோடி கணக்கில் சம்பாதிக்கும் நபராக இருக்கும் ஸ்வப்னா மீண்டும் திரையுலகிற்கு வர வாய்ப்பு இல்லை என்றாலும் அவர் நடித்த பழைய படங்கள் இன்னும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா நினைவில் இருக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews