சூர்யா 44-ல் முதன் முறையாக முதன்முறையாக இணையும் இசையமைப்பாளர்.. எகிற வைக்கும் எதிர்பார்ப்பு

தேனிசைத் தென்றால் தேவாவின் இசையில் அவள் வருவாளா பாடல் மூலம் திரையுலகில் நேருக்குநேர் படத்தின் மூலம் அடியெடுத்து வைத்தவர் சூர்யா. நேருக்கு நேர் படத்தில் சிம்ரனுடன் ஒரு ஜோடிப் பாடலும், அவள் வருவாளா பாடலும் சூப்பர் ஹிட் ஆனது. இன்றளவும் இந்தப் பாடல் டிரெண்டிங்கில் உள்ளது.

தொடர்ந்து தனது அடுத்தடுத்த படங்களில் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், யுவன், தேவி ஸ்ரீ பிரசாத் உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முன்னனி இசையமைப்பாளர்களுடன் பணிபுரிந்த சூர்யா பல்வேறு ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ளார்.

தற்போது கங்குவா படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் சூர்யா இந்தப் படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த வருட இறுதிக்குள் கங்குவா வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப்படத்திற்கு இசையமைத்து வருபவர் தேவி ஸ்ரீபிரசாத். பான் இந்தியா படமாக கங்குவா வெளியாக உள்ளதால் இந்தப் படத்தில் தென்னிந்திய மொழி ரசிகர்கள் விரும்பும் வகையில் இசையமைத்து வருகிறார் தேவி ஸ்ரீ பிரசாத்.

கங்குவா படத்தினையடுத்து சூர்யா இயக்குநர் வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியானது. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியான நிலையில் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

காதலிலும் காமெடியிலும் அசத்திய ரஜினி.. முதலில் நடிக்க மறுத்து பின் ஹிட்டான வரலாறு..

அதற்கு அடுத்தே வாடிவாசல் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு தீபாவளியில் ஜிகர்தாண்டா டபுள் எக்ஸ் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்து மாபெரும் வெற்றியைப் பதிவு செய்த கார்த்திக் சுப்புராஜ் அடுத்ததாக சூர்யா 44 படத்தில் இணைந்துள்ளார்.

இன்னமும் பெயரிடப்படாத இத்திரைப்படத்திற்கு இதுவரை சூர்யா படத்திற்கு இசையமைக்காத சந்தோஷ் நாராயணன் இசையமைக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் பின்னனி இசையில் மாஸ் காட்டிய சந்தோஷ் நாராயணன் தற்போது கார்த்திக் சுப்புராஜுடன் மீண்டும் இணைந்துள்ளார்.

இதுகுறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது சமூக வலைதளப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, “எப்போதும்போல உங்கள் சம்பவங்களப் பண்ணுங்கள் அண்ணா.. ஒரு டான்ஸ் மெட்டீரியல் பாடலும் வையுங்க..” என அந்தப் பதிவில் தெரிவித்திருக்கிறார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...