மாதம் 10 ரூபாய் சம்பளத்தில் நடிக்க ஒப்பந்தமான நடிகர்.. திரையுலகை திரும்பி பார்க்க வைத்த ஓ.ஏ.கே தேவர்..!

திரை உலகில் நடிக்க வேண்டும் என்ற ஆசை காரணமாக சேலம் மாடர்ன் கம்பெனி நிறுவனத்தில் மாதம் பத்து ரூபாய் சம்பளத்தில் நடிக்க ஆரம்பித்து, சின்ன சின்ன கேரக்டரில் நடித்தவர், பின்னாளில் எம்ஜிஆர் சிவாஜி ஆகியோர்களே ஆச்சரியப்படும் அளவிற்கு நடிப்பில் அசத்தி இருந்தார் என்றால் அவர் தான் நடிகர் ஓ.ஏ.கே. தேவர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த ஓ.ஏ.கே. தேவர் சிறு வயதிலேயே கலைகளில் ஆர்வமிக்கவராக இருந்தார். ஆனால் அவரது எடுப்பான தோற்றத்தை பார்த்த அவரது தந்தை அவரை ராணுவத்தில் சேர்க்க முடிவு செய்தார். ராணுவத்தில் இணைய விருப்பம் இல்லை என்றாலும் தந்தையின் சொல்லுக்கு கட்டுப்பட்டு இராணுவத்தில் சேர்ந்தார்.

நான்கு வருடங்கள் ராணுவத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த நிலையில் தான் திடீரென தந்தை இறந்த செய்தி கேட்டு ஊருக்கு வந்தார். அதன் பிறகு திரும்பவும் அவர் ராணுவத்திற்கு செல்ல விரும்பவில்லை.

பாரதிராஜாவின் என் உயிர் தோழன்.. பாராட்டப்பட்ட மறைந்த நடிகர் பாபுவின் நடிப்பு..!!

இதனை அடுத்து தனது கலை தாக்கத்தை தீர்த்துக் கொள்ளும் வகையில் சிவாஜி உள்பட பலரை வளர்த்து விட்ட சக்தி நாடக சபாவில் இணைந்தார். அங்குதான் அவருக்கு சிவாஜி, எஸ் வி சுப்பையா, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் உள்ளிட்டோர் நண்பர்கள் ஆகினார்.

ஆனால் தனக்கு முன்பே சிவாஜி உள்பட அனைவருக்கும் திரைப்படத்தில் வாய்ப்பு பெற்ற நிலையில் ஓ.ஏ.கே. தேவருக்கு மட்டும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனை அடுத்து அவர் கம்பெனி கம்பெனி ஆக வாய்ப்புக்காக ஏறி இறங்கினார்.

இந்த நிலையில் தான் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் சேலம் மாடர்ன் தியேட்டர் ஸ்டுடியோவில் அவரை வேலைக்கு சேர்த்தார். அங்கு அவருக்கு மாதம் 10 ரூபாய் சம்பளம் கொடுத்து மாடர்ன் ஸ்டேட்டஸ் தயாரிக்கும் திரைப்படங்களில் சின்ன சின்ன கேரக்டர்கள் கொடுத்தனர்.

ஒரு கட்டத்தில் அவர் இப்படியே இருந்தால் வளர முடியாது என்று முடிவு செய்து மீண்டும் அங்கிருந்து வெளியே வந்து வாய்ப்புகளை தேட ஆரம்பித்தார். அப்போது அவருக்கு மாமன் மகள் என்ற திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதேபோல் மதுரை வீரன் திரைப்படத்தில் திருமலை நாயக்கர் மன்னன் வேடத்தில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது.

700 படங்களுக்கும் மேல் நடித்த வில்லன் நடிகர்.. 2 படத்தை தயாரித்து பெரும் நஷ்டம்.. எஸ்.வி ராமதாஸ் திரைப்பயணம்..!

இந்த இரண்டு வேடங்களையும் அவர் சரியாக பயன்படுத்திக் கொண்டதை அடுத்து திரையுலகமே அவரை திரும்பி பார்த்தது. வாட்ட சாட்டமான உடல்வாகு, தெள்ளத்தெளிவான தமிழ் உச்சரிப்பு, கம்பீரமான பாடிலாங்வேஜ் ஆகியவை காரணமாக அவருக்கு பல படங்களில் வாய்ப்பு கிடைத்தது.

இவருக்கு மிகப்பெரிய புகழை பெற்றுக் கொடுத்த திரைப்படம் என்றால் அது வீரபாண்டிய கட்டபொம்மன் என்று சொல்லலாம். அந்த படத்தில் அவர் ஊமைத்துரை என்ற கேரக்டரில் நடித்து அசத்திருப்பார். அதன் பிறகு சிவாஜியின் புதிய பறவை என்ற படத்தில் போலீஸ் கேரக்டரில் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

அதேபோல் எதிர் நீச்சல் திரைப்படத்தில் சின்ன கேரக்டர் என்றாலும் அற்புதமான காமெடி கலந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

ஜெய்சங்கர் உடன் யார் நீ, எம்ஜிஆர் உடன் ராஜா தேசிங்கு, சிவாஜி உடன் உத்தமபுத்திரன் உள்ளிட்ட பல திரைப்படங்களை நடித்திருந்தார். குறிப்பாக சிவாஜி உடன் அவர் நடித்த தங்கச்சுரங்கம் என்ற திரைப்படத்தில் சிவாஜிக்கு அப்பாவாகவும் வில்லனாகவும் நடித்திருந்தார். அவரது நடிப்பு மிகப்பெரிய அளவில் பாராட்டப்பட்டது.

இதனை அடுத்து அவர் சொந்தமாக நாடக கம்பெனி தொடங்கி மதுரை, திருநெல்வேலி, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் அவர் நாடகங்களை நடத்தினார். அங்கு அவரது நாடகங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. வில்லன், குணச்சித்திரம் என்று எந்த கேரக்டராக இருந்தாலும் அவர் நடிப்பில் ஊதி தள்ளி விடுவார்.

அதனால் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த 1973 ஆம் ஆண்டு 49 வயதில் அவர் எதிர்பாராத வகையில் மரணமடைந்தார். அவரது நடிப்பில் அவர் உயிரோடு இருந்தபோது வெளியான கடைசி படம் ஜீசஸ் என்ற மலையாள படம்.

வரும், ஆனா வராது.. லட்சக்கணக்கில் சம்பளம் பெறாமல் ஏமாந்த நடிகர் என்னத்த கண்ணய்யா..!!

அவரது மறைவுக்கு பின்னர் இரண்டு படங்கள் வெளியானது. கம்பீரமான தோற்றம், கணீர் குரல் ஆகியவற்றால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற ஓ.ஏ.கே. தேவரை தமிழ்சினிமா என்றும் மறக்காது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...