ஆயிரம் பொன்னாச்சே.. சொக்கா.. தருமியாக பிச்சு உதறிய நாகேஷ்-க்கு திருவிளையாடல் வெற்றி விழாவில் ஏற்பட்ட கசப்பான அனுபவம்..

சிவபெருமானின் திருவிளையாடல் புராணத்தை மையமாக வைத்து பழம்பெரும் இயக்குநர் ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் 1965-ல் வெளிவந்த திரைப்படம் தான் திருவிளையாடல். சிவாஜிகணேசன், சாவித்திரி, முத்துராமன், நாகேஷ் உள்ளிட்ட பலர் நடித்த இப்படம் மாபெரும் வரலாற்று வெற்றியைப் பெற்றது.

இந்தப் படத்தின் ஒலிநாடாக்கள் கோவில் திருவிழாக்களிலும், மேடைகளிலும் சக்கைப் போடு போட்டன. இந்தப் படத்தின் வசனங்களை தெரியாத 70,80,90 கிட்ஸே கிடையாது எனலாம். திருவிளையாடல் படத்தில் நடிகர் திலகம், நடிகையர் திலகத்துக்கு அடுத்தபடியாக நடிப்பில் கலக்கி இருப்பவர் நாகேஷ்.

தருமி என்னும் ஏழைப் புலவனாக அவர் மீனாட்சி அம்மன் கோவிலிலும், பாண்டியன் அரசவையிலும் செய்யும் காமெடிகள் வயிறு குலுங்க சிரிக்க வைப்பவை. இந்தப் படம் நடிக்கும் போது நாகேஷ் ஒரே நாளில் 4,5 படங்கள் வரை நடித்துக்கொண்டிருந்தார். அவரது கால்ஷீட் நிரம்பி வழிந்தது. எனவே இந்த ஒருகாட்சிக்காக மட்டும் அவரை நடிக்க அணுக அவரும் ஒப்புக் கொண்டு நடித்தார். இந்தக் காட்சியில் அவர் புலம்புவதாக எடுக்கப்பட்ட காட்சிகள் அனைத்தும் இயல்பாக வந்ததே.

ஆயிரம் பொன்னாச்சே.. சொக்கா.. தருமியாக பிச்சு உதறிய நாகேஷ்-க்கு திருவிளையாடல் வெற்றி விழாவில் ஏற்பட்ட கசப்பான அனுபவம்..

ஓர் ஏழைப் புலவன் பணம் இல்லையென்றால் எப்படிப் புலம்புவானோ அதை அப்படியே கண்முன் நிறுத்தியிருப்பார் நாகேஷ். அதன்பின் சிவாஜியுடன் வரும் கேள்விபதில் காட்சிகளை இன்றுவரை நகலெடுத்து நடிக்காத சினிமா பிரபலங்களே கிடையாது. இவ்வாறு முழுக்க முழுக்க வயிறு குலுங்கச் சிரிக்க வைத்த திருவிளையாடல் மாபெரும் வெற்றி பெற்றது.

அப்போது இந்தப் படத்தின் வெற்றி விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் சிவாஜி கணேசனுக்கும், சாவித்ரிக்கும் வைர நகை வழங்கப் போவதாக உதவி இயக்குநர் நாகேஷிடம் கூறியிருக்கிறார். அப்போது நாகேஷ் அதேபோல் எனக்கும் படத்தில் வருவது போல ஆயிரம் பொற்காசுகள் வழங்குவதற்குப் பதிலாக அதில் சிறிய கற்களையாவது போட்டுத் தாருங்கள் என நகைச்சுவையாகப் பேசியிருக்கிறார்.

இதனை அந்த உதவி இயக்குநர் ஏ.பி.நாகராஜனிடம் சொல்ல அவர் வெற்றி விழாவிற்கு அவருக்கு அழைப்பிதழே அனுப்பவில்லை. அதன்பின் விழா முடிந்தவுடன் ஏன் எனக்கு அழைப்பிதழ் அனுப்பவில்லை என்று நாகேஷ் கேட்க, அந்த உதவிஇயக்குநர் நீங்கள் பொற்காசுகள் குறித்துச் சொன்னதை இயக்குநரிடம் சொன்னேன். அதனால் அவர் கோபித்துக் கொண்டார். அதனால் உங்களுக்கு அழைப்பிதழ் அனுப்பவில்லை என்று கூறியிருக்கிறார். தமிழ்சினிமாவில் இப்படியும் சில விசித்திரங்கள் நடந்திருக்கின்றன.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...