தி வால் கேம் ஷோ ப்ரோமோஷனுக்காக வந்த பிரியங்கா மற்றும் மாபாக!!

நேற்று காலை பிக் பாஸ் வீட்டிற்கு விஜய் தொலைக்காட்சியைச் சார்ந்த பல பிரபலங்களும் வந்து சென்ற வண்ணமே உள்ளனர். இந்தவகையில் நேற்றைய நிகழ்ச்சியில் விஜய் டிவியின் தொகுப்பாளர்கள் பிரியங்கா, பாலாஜி, ரியோ, ரக்‌ஷன், மாகாபா…

நேற்று காலை பிக் பாஸ் வீட்டிற்கு விஜய் தொலைக்காட்சியைச் சார்ந்த பல பிரபலங்களும் வந்து சென்ற வண்ணமே உள்ளனர்.

இந்தவகையில் நேற்றைய நிகழ்ச்சியில் விஜய் டிவியின் தொகுப்பாளர்கள் பிரியங்கா, பாலாஜி, ரியோ, ரக்‌ஷன், மாகாபா ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்கு விருந்தினராக வந்தனர்.

310ff6498a10fda0817bc2f2d320667c

அதாவது மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா தொகுத்து வழங்கவுள்ள தி வால் என்ற கேம் ஷோ பற்றிய புரோமோ வீடியோ போடப்பட்டது.

இந்த புரோமோவில்,  அதிர்ஷ்டம் மற்றும் அறிவு இரண்டும் வேண்டும் என்று கூறப்பட்டது, அதாவது கேள்விகளுக்கு சரியாக பதில் அளிக்கும் போட்டியாளர்கள் பந்தை உருட்டி கிடைக்கும் பணத்தினை வெல்லலாம்.

இந்த நிகழ்ச்சி வரும் 12 ஆம் தேதி முதல் வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பு ஆக உள்ளது என்ற தகவலையும் தெரிவித்து உள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன