நேற்றைய நிகழ்ச்சியில் விஜய் டிவியின் தொகுப்பாளர்கள் பிரியங்கா, பாலாஜி, ரியோ, ரக்ஷன், மாகாபா ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்கு விருந்தினராக வந்தனர்.
பிக் பாஸ் போட்ட கண்டிஷனால் போட்டியாளர்கள் தொகுப்பாளர்களைக் கண்டுகொள்ளவில்லை. ஆனால் தொகுப்பாளர்களும் விடவே இல்லை. அதில் அனைவரிடமும் மாட்டிக் கொண்டவர் சாண்டியே ஆவார்.
அடுத்து சோபாவில் அமர்ந்திருந்த அவர்கள் போட்டியாளர்களிடம் கலகலப்பாக பேசினர். அடுத்து பாத்ரூமுக்கு சென்று அங்கு நின்று கொண்டிருந்த லாஸ்லியாவை கவினை வைத்து கலாய்த்தனர்.
அடுத்து மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா தொகுத்து வழங்கவுள்ள தி வால் என்ற கேம் ஷோ பற்றிய புரோமோ வீடியோ போடப்பட்டது.
போட்டியாளர்கள் இந்தப் போட்டியில் பைனல் வரை வர என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஐடியாக்களை வழங்கினர். கிளம்பத் தயாரான தொகுப்பாளர்களை, பிக் பாஸ் இடைமறித்து சோபாவை உடைத்ததற்கு நன்றி பிரியங்கா என்று கூறி கிண்டல் செய்தார்.
பிக் பாஸ் வீட்டிற்கு வெளியில் இருந்த ஷோபாவை பிரியங்கா உட்கார்ந்தே உடைத்துவிட்டார். இதற்கு, ஷோபாவை டிஸ்மேண்டில் செய்ததற்காக பிரியங்காவிற்கு நன்றி தெரிவித்தார் பிக் பாஸ்.