மனைவியை கலாய்த்த சாண்டி… கோபித்துக் கொண்ட சில்வியா சாண்டி!!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி நாளையுடன் முடிவடைய உள்ளது, பார்வையாளர்கள் அனைவரும் நாளை யார் ஜெயிப்பார்கள் என்பதை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டுள்ளனர். நேற்றைய நிகழ்ச்சியில், என் ப்ரண்டைப் போல் யாரு மச்சா? என்ற பாடலோடு…

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி நாளையுடன் முடிவடைய உள்ளது, பார்வையாளர்கள் அனைவரும் நாளை யார் ஜெயிப்பார்கள் என்பதை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டுள்ளனர். நேற்றைய நிகழ்ச்சியில், என் ப்ரண்டைப் போல் யாரு மச்சா? என்ற பாடலோடு பிக் பாஸ் வீட்டிற்குள் காலடி எடுத்துவைத்தனர் கவின் மற்றும் தர்ஷன் ஆகியோர்.

நேற்று போட்டியாளர்களுக்கு ஏர்டெல் 4 ஜி மூலம் வீடியோ காலிங்கில் பேசலாம் என்று பிக் பாஸ் கூறினார்.

30e9761fe9a401eae27ab01397876dbc

அப்போது சாண்டி தனது மகள் சுசானாவிடன் பேசினார். மகள் லாலா அப்பா சாண்டிக்கு முத்தம் கொடுத்தார், லாலா என்று அழைத்துக் கொண்டே இருந்தார் சாண்டி.

சாண்டியின் மனைவி அப்பாவிடம் அழ வேண்டாம் என்று சொல்ல சொன்னார். அடுத்து லாலா விளையாட சென்றுவிட, சாண்டி அவருடைய மனைவியின் முகத்தினை காட்டுமாறு சொல்ல சொன்னார்.

அப்போது சாண்டியின் மனைவி முகத்தைக் காட்ட, குளோசப்ல வேண்டாம் பயமா இருக்கு என்று கிண்டலடித்தார், உடனே அவர் மனைவி என் மானத்தை வாங்குவீங்கன்னு தெரியும், அதுனாலதான் காட்டல” என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன