சேலை வாங்கிக் கொடுத்த சேரன்… மகிழ்ச்சியில் ஷெரின்!!

நேற்று போட்டியாளர்கள் ஏர்டெல் 4 ஜி மூலம் வீடியோ காலிங்கில் பேசலாம் என்று பிக் பாஸ் கூறினார். அப்போது சாண்டி தனது மகள் சுசானாவிடன் பேசினார். அப்போது சாண்டியின் மனைவி முகத்தைக் காட்ட, குளோசப்ல…

நேற்று போட்டியாளர்கள் ஏர்டெல் 4 ஜி மூலம் வீடியோ காலிங்கில் பேசலாம் என்று பிக் பாஸ் கூறினார்.

அப்போது சாண்டி தனது மகள் சுசானாவிடன் பேசினார். அப்போது சாண்டியின் மனைவி முகத்தைக் காட்ட, குளோசப்ல வேண்டாம் பயமா இருக்கு என்று கிண்டலடித்தார்.

68af6c87c72f98f3a50ae155b2a8830a

அடுத்து பேசிய ஷெரின், அம்மாவிடம் தன்னுடைய நாய்க்குட்டியை மிஸ் செய்வதாக கூறினார். அதனை அழைத்து வந்திருக்கலாம் என்று கூறி புலம்பினார். ஷெரின் அம்மா ஜெயித்து வர வாழ்த்துகள் கூறினார்.

சேரன் தனக்கு வாங்கிக் கொடுத்த புடவை என்று கூறி சந்தோசப்பட்டார், உடனே அவர் அம்மாவும் நன்றாக இருக்கிறது. நீ அழகாக இருக்கிறாய் என்று கூறினார்.

அவருடைய அம்மா வந்தபோதே, சேரன் தனக்கு அதிக அளவு இங்கு ஆதரவாக இருந்ததாகவும், அவரைப் பார்த்ததும் அப்பாவினை மிஸ் செய்வதாகவும் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சில இடங்களில் தனக்கு நன்மை செய்த, சேரன்மேல் இந்த அளவு பாசம் கொண்டவராக இருக்கும் ஷெரினில் பாதி அளவுகூட லாஸ்லியா இல்லையே என பலரும் கூறி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன