தெலுங்கானா மாநில கவர்னராக சமீபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த முன்னாள் பாரதிய ஜனதா தமிழக தலைவரான தமிழிசை அவர்கள் சில நாட்களுக்கு முன் நியமிக்கப்பட்டார்.
இவரை தெலுங்கு திரையுலகத்தின் சூப்பர் ஸ்டாரும் மூத்த நடிகருமான சிரஞ்சீவி சந்தித்தார்.
இரண்டு நாட்களுக்கு முன் தான் சிரஞ்சீவி நடித்த சைரா நரசிம்ம ரெட்டி திரைப்படம் வெளிவந்துள்ளது. சுதந்திர போராட்ட கதையாக இது வரவேற்பு பெற்று வருகிறது
இந்த நிலையில் கவர்னர் தமிழிசையை மரியாதை நிமித்தமாக சிரஞ்சீவி சந்தித்து பேசினார்.