விஜய் தொலைக்காட்சியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி இன்றுடன் முடிவடையவுள்ளது. 106 நாட்களாக இதனை தன் வீடுபோல் ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளர்களுக்கு விருந்தாக அமையும் என்று தெரிகிறது.
பைனல்ஸை நோக்கி ஒவ்வொருவரும் காத்துக் கொண்டிருந்தனர். இந்நிகழ்ச்சி யாரும் எதிர்பார்க்காத அளவு பிரமாண்டமாக இருக்கும் என்று ப்ரோமோவிலேயே தெரிகிறது.
வார இறுதியான நேற்று கமல் ஹாசன் இந்த நிகழ்ச்சியில் 500 பேருக்கு வேலை வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
ஒவ்வொரு சிறு விஷயங்களுக்குப் பின்னும் பல நபர்களின் உழைப்பு உள்ளது. சாதாரணமாக நினைக்கும் கதவினைக்கூட 6 அல்லது 7 பேர் இயக்குகின்றனர்.
போட்டியாளர்கள், டெக்னிக்கல் ஆபரேட்டர்கள், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர், கார் டிரைவர்கள், என 500 பேர் வேலை செய்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சியின் மூலம் பயன் என்ன? என்று பலர் கேட்கின்றனர். இதுவே ஒரு மிகப் பெரிய பயன்தான். மேலும் கோடான கோடி ரசிகர்களுக்கு ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியாகவும் இருந்துள்ளது என்று கூறினார்.