விஜய் தொலைக்காட்சியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி இன்றுடன் முடிவடையவுள்ளது. 106 நாட்களாக இதனை தன் வீடுபோல் ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளர்களுக்கு விருந்தாக அமையும் என்று தெரிகிறது.
பைனல்ஸை நோக்கி ஒவ்வொருவரும் காத்துக் கொண்டிருந்தனர். விஜய் தொலைக்காட்சியில் அவார்டு பங்க்சனே பிரமாண்டமாய் இருக்கும், பினாலே சொல்லவா வேண்டும்? அதிலும் மற்ற சீசன்களைவிட, இந்த சீசன் உலக அளவில் பிரபலமானது.
அதாவது இதுவரை இல்லாத வகையில் மற்ற நாடுகளைச் சார்ந்தவர்களும் இதில் பங்கேற்றுள்ளனர். இது உலகத் தமிழர்கள் மத்தியில் பிரபலமாக்க செய்த உக்தியாகும்.
தற்போது பைனல்சை நெருங்கிவிட்ட நிலையில், பினாலே ஏற்பாடுகள் பிரமாண்டமாக செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது இன்று மாலை 6 மணிக்கு துவங்கவுள்ளது.
டைட்டிலை வெல்லப்போவது முகின் தான் என்று பலரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு உள்ளனர்.