இராமநாதபுரம் மாவட்டம் திரு உத்திரகோசமங்கையில் உள்ளது பச்சை மரகதக்கல்லால் ஆன நடராஜர் சிலை. ஆசியாவிலேயே மரகதக்கல்லில் பெரிய மரகதச்சிலை எங்கும் கிடையாது.
இந்த கோவிலில் மட்டும் இருக்கும் பச்சை மரகதக்கல் எப்போது வேண்டுமானலும் தரிசிக்கலாம் என்றாலும் மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை அன்றுதான் முழுவதுமாக பச்சை மரகதக்கல்லுடன் உள்ள நடராஜரின் திருமேனியை தரிசிக்க முடியும்.
மற்ற நாட்களில் சந்தனம் பூசப்பட்ட நடராஜரைத்தான் தரிசிக்க முடியும். ஏனென்றால் மரகதத்துக்கு அதிர்வுகளை தாங்கும் சக்தி இல்லை என்பதால் அந்த சிலைக்கு ஆருத்ரா தரிசனம் அன்று இரவு சந்தனம் பூசப்படும். அன்றைய தினம் காலையில் இருந்து மரகத நடராஜர் சந்தனம் நீக்கப்பட்டு காட்சி தருவார்.இரவு பக்தர்கள் தரிசனம் முடிந்த உடன் சந்தனக்காப்பு பூசப்படும்
இந்த நிகழ்வைக்காண ஏராளமான பக்தர்கள் பல ஊர்களில் இருந்து வருவார்கள். இந்த வருடம் வரும் 19ம் தேதி விழா நடைபெறுகிறது. கோவில் நிர்வாகம் சார்பில் ஸ்பெஷல் டிக்கெட்டுகளும் பெறப்படும். ஆன்லைனில் கொடுத்துக்கொண்டிருந்த நிலையில் அந்த சேவை நிறுத்தப்பட்டுள்ளது. கோவிலில் சென்று அந்த டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம்.