சென்னை விமான நிலையத்தில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகையும் சமூக செயற்பாடுகளில் ஆர்வம் உள்ளவருமான வரலட்சுமி சரத்குமார் கலந்து கொண்டார்.

அதில் கலந்து கொண்டு பின்பு பத்திரிக்கையாளர்களை சந்தித்த வரு சரத் எல்லா உறுப்புகளையும் போன்று மார்பகமும் ஓர் அங்கம்தான் அதை பேச ஏன் கூச்சப்பட வேண்டும். இதை பற்றி தாய், சகோதரியிடம் கூச்சமில்லாமல் பேச வேண்டும்.
அப்போதுதான் மார்பக புற்றுநோய் போன்ற நோய்களை முற்றிலும் ஒழிக்க முடியும் என்று வரலட்சுமி பேசினார்.
ஆண்களுக்கு எப்படி மார்பகம் உடலின் அங்கமோ அதைப்போலத்தான் பெண்ணுக்கும் இது உடலின் ஓர் அங்கம் என பேசினார்.
