100ஆவது நாளில் கார்டன் ஏரியா பார்ட்டி ஹால் போல் மாற்றப்பட்டது. ஏர்டெல் சூப்பர் சிங்கர் சீனியர்ஸ் குழு உள்ளே வந்தது அவர்களுடன் சூப்பர் சிங்கர் புகழ் மணி அண்ட் பேண்ட்டும் உள்ளே வந்தது.
உள்ளே வந்த அவர்கள் போட்டியாளர்களுக்கு பிடித்த பாடலை பாடச் சொல்லி அவர்களை குஷிப்படுத்தினர்.
அப்போது விஸ்வாசம் படத்தில் வந்த கண்ணான கண்ணே பாடலை சாண்டியின் மகள் லாலாவுக்காகப் பாடினர். அப்போது அந்தப் பாடலுக்கு சாண்டி நடனம் ஆட, அது பார்ப்போரை கலங்கச் செய்யும்படியாக இருந்தது.
பார்ட்டி முடிந்து சாண்டி, முகின், ஷெரின், லாஸ்லியா ஆகியோரைத் தவிர மற்றவர்கள் வெளியேறும் படி, பிக் பாஸ் அறிவித்தார்.
அப்போது சாண்டி குருநாதா, கடைசி பாட்டு ப்ளீஸ் ப்ளீஸ் என்று கேட்க, பிக் பாஸ் அனைவரும் ஒன்றாக ப்ளீஸ் ப்ளீஸ் கேட்க வேண்டும் என்று கூறினார்.
உடனே பிக் பாஸ் ஓகே சொன்னார். கடைசியாக டண்டனக்கா டண்டனக்கா பாடலை பாடியவாறே அனைவருமே ஆட்டம் போட்டு வெளியேறினர்.