காளிகாம்பாளை புகழ்ந்து பாரதியார் பாடிய பாடல்

By Abiram A

Published:

இன்று மஹாகவி பாரதியின் பிறந்த தினம் ஆகும். பெண்கள் சமமாக வாழ வேண்டும், யாரும் ஜாதி வேற்றுமை பார்க்க கூடாது என தன் இறுதி நாள் வரை போராடியவர் மஹாகவி பாரதி.

சுதந்திர தாக உணர்வுடன் இவர் சென்னை சுதேசமித்திரன் பத்திரிக்கையில் வேலை செய்யும்போது சென்னை பாரிமுனை தம்பு செட்டி தெருவில் உள்ள காளிகாம்பாள் கோவிலுக்கு நடந்தே செல்வாராம்.

காளியின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்ட பாரதியார் காளிகாம்பாள் கோவிலில் சென்று காளியை புகழ்ந்து பாடுவாராம்.

காளியை புகழ்ந்து பாடிய பாடல் இதுதான்.

யாதுமாகி நின்றாய் காளி

எங்கும் நீ நிறைந்தாய்

தீது நன்மையெல்லாம் – நின்றன்

செயல்களின்றி இல்லை

போதும் இந்த மாந்தர் வாழும்

பொய்மை வாழ்க்கையெல்லாம்

ஆதி சக்தி தாயே – என் மீது

அருள் புரிந்து காப்பாய்.

இந்த பாடலை காளியை நினைத்து தினமும் பூஜையறையில் பாடி வாருங்கள் அனைத்தும் நல்லவிதமாகவே நடக்கும்.காளியின் அருள் கிடைக்கும். காளியின் அருளால் புகழ்பெற்றவர்கள் அனேகம் பேர் . இன்று பாரதியாரின் பிறந்த நாள் அவரை போற்றும் விதத்தில் அவர் பாடிய காளிகாம்பாள் துதி பாடலை மேலே வெளியிட்டுள்ளோம்.

Leave a Comment