’விஜய் 64’ படத்தில் ‘பேட்ட’ நடிகை: அதிகாரபூர்வ அறிவிப்பு

நடிகர் விஜய் நடிக்கவுள்ள ’விஜய் 64’ படத்தில் ஏற்கனவே விஜய்சேதுபதி, சாந்தனு, அந்தோணி வர்கீஸ் ஆகியோர் நடிக்கவிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் நாயகி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ’விஜய் 64’…

470db626343e78ebd9c3a942f39f7829-1

நடிகர் விஜய் நடிக்கவுள்ள ’விஜய் 64’ படத்தில் ஏற்கனவே விஜய்சேதுபதி, சாந்தனு, அந்தோணி வர்கீஸ் ஆகியோர் நடிக்கவிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் நாயகி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

’விஜய் 64’ படத்தின் நாயகி மாளவிகா மேனன் என தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ திரைப்படத்தில் நடித்தவர் என்பது தெரிந்ததே

’பேட்ட’ என்ற ஒரே ஒரு தமிழ்ப்படத்தில் அதிலும் பூங்கொடி என்ற சிறு கேரக்டரில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்த மாளவிகா மேனனுக்கு இரண்டாவது படமே விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதை கோலிவுட் திரையுலகினர் ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன