காஞ்சனா திரைப்படம் சில வருடங்களுக்கு முன் தமிழில் வந்து மிகப்பெரும் வெற்றி பெற்றது. இதில் ராகவா லாரன்ஸ், படத்தில் முக்கிய கேரக்டராக சரத்குமார் நடித்திருந்தார்.
இப்படம் சில மாதங்களுக்கு முன் ஹிந்தியில் ராகவா லாரன்ஸே இயக்குவதாக இருந்து பின்பு அப்படத்தில் இருந்து விலகிக்கொண்டதாக கூறப்பட்டது. இப்படத்தின் பெயர் லக்ஷ்மி பாம் என்பதாகும்.
பின்பு அவரே அப்படத்தை இயக்குகிறார். இந்நிலையில் இப்படத்தின் லுக் வெளியாகியுள்ளது.
கீழ்க்கண்டவாறு அவர் இப்பட லுக் பற்றி டுவிட்டும் செய்துள்ளார்.
நவராத்திரி என்பது உள் தெய்வத்தை வணங்குவதும், உங்கள் வரம்பற்ற வலிமையைக் கொண்டாடுவதும் ஆகும். இந்த நல்ல சந்தர்ப்பத்தில், லக்ஷ்மி என்ற எனது தோற்றத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ஒரு பாத்திரத்தால் நான் உற்சாகமாகவும் பதட்டமாகவும் இருக்கிறேன் என கூறியுள்ளார்.