நீத்தார் கடன் தீர்க்கும் பரிதியப்பர் கோவில்

By Abiram A

Published:

தஞ்சை மாவட்டம் சூரக்கோட்டை அருகே உள்ள புகழ்பெற்ற கோவில்தான் பரிதியப்பர் கோவில். பொதுவாக காசி, ராமேஸ்வரம், திருவெண்காடு போன்ற ஸ்தலங்கள்தான் நீத்தார் கடன் தீர்ப்பதற்கு பரிகாரம் ஹோமம் செய்வதற்கு சிறந்த இடங்களாக கூறப்படுவதுண்டு.

ஆனால் இந்த கோவிலும் முன்னோர்களுக்கான காரியங்கள் செய்வதிலும் மற்றும் அனைத்து முன்னோர் தோஷம் போக்குவதிலும் முன்னணியாய் இருக்கும் கோவில் என்பது பலருக்கு தெரியாது.

இக்கோவில் திருப்பரிதி நியமம் என அழைக்கப்படுகிறது. இறைவன் பெயர் பரிதியப்பர், பாஸ்கரேஸ்வரர்.

தட்சன் நடத்திய யாகத்துக்கு சிவபெருமானுக்கு அழைப்பு அனுப்பவில்லை அந்த யாகத்தில் சூரிய பகவான் கலந்து கொண்டதால் அவருக்கு தோஷம் ஏற்பட்டது. தனது தோஷத்தைப் போக்கிக் கொள்ள சூரியன் 16 இடங்களில் சிவலிங்கம் ஸ்தாபித்து வழிபட்டான். இத்தலத்தில் தான் சூரியனுக்கு ஏற்பட்ட தோஷம் விலகியது.

ஒருவர் ஜாதகத்தில் சூரியன் பிதுர்காரகனாக இருப்பதால் பிதுர்களுக்குரிய அனைத்து தோஷங்களும் இங்கு விலகும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

மண்ணில் புதையுண்டு இருந்த சிவலிங்கத்தை மன்னன் சிபிச்சக்கரவர்த்தி எடுத்து இங்கு கோவில் அமைத்தான்.

முன்னோர்கள் ரீதியான பித்ரு தோஷ அமைப்புள்ளவர்கள் இந்த கோவில் வந்து பரிகார பூஜை செய்து கொள்ளலாம்.

Leave a Comment