விஜய் தொலைக்காட்சியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி, இந்த வாரத்துடன் முடியவுள்ளது.
மாலை நேரம் இன்ப அதிர்ச்சி கொடுக்க, வனிதா, அபிராமி, சாக்ஷி, கஸ்தூரி, சேரன் ஆகியோர் என்ட்ரி கொடுத்தனர். போட்டியாளர்கள் ஓடிச் சென்று கட்டியணைத்து வரவேற்றனர்.
போட்டியாளர்கள் ஒவ்வொருவராய்ப் பேச, “தர்ஷன் உடன் தொடர்பு வைத்திருந்ததே அவன் வெளியேறியதற்குக் காரணம். இதை உக்தியாக கையாண்ட ஷெரின் உள்ளே உள்ளார் என்று பிரச்சினையைக் கிளப்ப ஷாக்சி கோபப்பட்டார்.
சேரனும் அவர் பங்குக்கு எடுத்துக் கூற, வனிதா ஏற்கவே இல்லை. சும்மா இருந்த கஸ்தூரியை ரூமை விட்டு வெளியே போங்கள் என்று மரியாதை கொடுக்காமல் நடந்துகொண்டார்.
அவர் பதில் பேச முயற்சிக்கையில், அவர் விஷயத்தை ஊதி ஊதி பெரிதாக்குபவர் என்று வீண் பழி போட்டார் வனிதா.