கமலஹாசன் நேற்று முன் தினம் காந்தி ஜெயந்தி என்பதால் மகாத்மா காந்திக்காக ஒரு டுவிட் போட்டுள்ளார். அதில் எம் காந்தியின் திருநீற்றை களவுற்ற பக்தர்காள் உம் நெத்தியில் பூசிடவைத்த அச்சாம்பலை ஏற்றதில் மகிழ்கிறோம். இன்னமும் உளது நீர் சுட்டதின் பிணக்குவியல் கூடிடக்கூடிட உம்பக்தியின் அடிநாதம் காந்தியின் சாம்பலுடன் கைலாயமெய்தவே கணக்கிலா இந்தியர்கள் வழிகோலுகின்றோம் வாழ்த்துடன்கூடியே என பதிவிட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள ரசிகர் ஒருவர் அவரை வறுத்தெடுத்துள்ளார். குறிப்பிட்ட இயக்கம் தப்பு செஞ்சா குறிப்பிட்ட இயக்கத்தை திட்ட வேண்டியதுதானே நீங்க நகை கடை திருடன் திருவாரூர் என்பதால் திருவாரூர்காரன் அனைவரும் திருடன் அல்ல நீங்க பரமக்குடி என்பதால் பரமக்குடிக்காரன் அனைவரும் மோசமானவன் அல்ல என கமலுக்கு அந்த நபர் பதிலளித்துள்ளார்.