மகத், யாஷிகா இருவரும் வீட்டிற்கு வந்த அன்று ஷெரினுக்கு டாஸ்க் ஒன்று கொடுத்தார்கள். நீங்கள் இந்த வீட்டில் யாருக்கு கடிதம் எழுத விரும்புகிறீர்களோ அவங்களுக்கு கடிதம் ஒன்று எழுதுங்க என்ற டாஸ்கை ஷெரினுக்கு கொடுத்தனர். ஷெரினும் கடிதம் எழுதினார்கள்.
மகத், யாஷிகா வெளியே செல்லும் நேரம் வந்ததும் பிக்பாஸ் ஷெரின் யாருக்கு கடிதம் எழுதினாங்களோ அவர்களிடம் கொடுத்துவிட்டு செல்லுங்கள் என்றார். ஷெரின் அதனை அப்போதே கிழித்து விட்டார். அவர் குளிக்க சென்றபின், தர்ஷன் குப்பைத் தொட்டியில் கையைவிட்டு கிழித்து போட்ட கடிதத்தை எடுத்து படித்தார்.
ஷெரின் வந்தபின்னர், தர்ஷன் கடிதத்தில் எழுதியிருந்த ஒரு வரியை தர் சன் சொல்ல, அனைவரும் ஷெரினை கிண்டல் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.
சும்மாவே வீ ஆர் த பாய்ஸ் டீம் ஷெரினை டார்கெட் பண்ணும், இப்போ சொல்லவா வேண்டும். பாவம் ஷெரின் ரொம்ப சோகமாகிப் போனார்.
படித்ததோடு விட்டுவிடாமல் தர்ஷன் அனைவர் முன்னிலையில் சொல்லியது தவறு என பலரும் கூறி வருகின்றனர். பின்பு ஷெரினிடம் சென்று தான் மட்டும் படித்ததாக ஒப்புக் கொண்டார் தர்சன்.