பெற்றோரைவிட பெரிதாக கவினை நினைக்கும் லாஸ்லியா!!

By Staff

Published:

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. நேற்றைய நிகழ்ச்சியில் கவின் 5 லட்சத்தோடு வெளியேறத் தயாரானார்.

லாஸ்லியா எவ்வளவோ கூறியும் கவின் தன் முடிவினை மாற்றிக் கொள்வதாக இல்லை. பணம் கிடைத்ததும் தன் வீட்டின் கடன் பிரச்சினையை மனதில் கொண்டு கிளம்பிப் போய் விட்டார் கவின்.

cea439cf23904c062f9b6f567f584d8c

ஆனால் லாஸ்லியாவோ வந்த வேலையினை மறந்து, கவினின் காதலுக்கே முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருந்தார்.

நேற்று கவின் சென்றதும் போட்டியாளர்கள் அனைவரும் லோஸ்லியாவிற்கு ஆறுதல் கூறினர், ஃபைனல்ஸுக்கு போக வேண்டியவன் என்று கூறி அழ ஆரம்பிக்கவும், ஆறுதல் சொல்லும்விதமாக தர்சன் அவனுக்காகவும், உங்க அப்பாவுக்காகவும் இரு என்று தர்ஷன் அறிவுரை சொன்னார்.

ஆனால் லாஸ்லியாவோ எனக்கு ஃபைனல்ஸ் போக ஆசை இல்லை என்று சொல்லிவிட்டார்.     பெற்றோருக்காக பைனல்ஸ் போக வேண்டும் என்பதைவிட, தன்னைவிட்டுப் போன கவினை நினைத்து லாஸ்லியா எடுத்த இந்த முடிவு சரியாக இருக்குமா? என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Leave a Comment