வாஸ்து என்பது தற்போது பெரும்பாலான இடங்களில் அத்தியாவசியமான ஒன்றாகி விட்டது. வீடு கட்டினால் வாஸ்து பார்த்து எது எந்த இடத்தில் வர வேண்டும் என பார்த்து பார்த்து கட்டுகிறோம். இது போலவே நாம் வேலை பார்க்கும் அலுவலகத்தையும் அமைக்கிறோம்.
எல்லாவற்றையும் சரியாக பார்த்து கட்டினாலும் வீட்டில் நாம் வைத்திருக்கும் பொருட்களிலும் சில வாஸ்துகள் உள்ளது. அவற்றில் ஒன்றுதான் கடிகாரம்.
காலத்தையும் நேரத்தையும் குறிப்பது கடிகாரம் நேரம் காலம் நன்றாக இருந்தால்தான் வாழ்வில் அனைத்தும் சிறக்கும் என்பது எழுதப்படாத விதி. அத்தகைய நேரத்தை நமக்கு வழங்கும் முக்கிய காரணிகளில் ஒன்றான கடிகாரத்தை எப்போதும் இயங்குவது போலவே வீட்டிலும் அலுவலகத்திலும் மாட்ட வேண்டும்.
கடிகாரம் இயங்காவிட்டால் நாமும் இயங்குவதில் முடங்கி விடக்கூடிய சூழ்நிலை ஏற்படும். அனைத்து வேலைகளிலும் தொய்வு ஏற்படும். ஓடிக்கொண்டிருக்கும் கடிகாரம் பேட்டரி இல்லாமல் நின்று விட்டால் உடனே பேட்டரி வாங்கி அதற்கு பொருத்த வேண்டும். பிறகு பார்க்கலாம் என சோம்பேறித்தனமாக இருக்க கூடாது.
நேரம் நன்றாக ஓடினால்தான் வாழ்வும் சிறப்பாக இருக்கும். சுருக்கமாக சொன்னால் கடிகாரத்தை ஓடவிடாமல் போட்டிருந்தால் தரித்திர நிலை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதனால் கடிகாரத்தை எப்போதுமே இயங்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். கடிகாரம் ரிப்பேர் சரி செய்ய முடியாது என்றால் தூக்கி போட்டு விடுங்கள் அதை மாட்டியே வைக்காதீர்கள்.