யாரும் ஒருவர் இறக்கும்போது அவருக்குரிய திதி தர்ப்பணங்களை செய்து விடுகிறார்கள். செய்து முடித்ததும் அந்த கடமை முடிந்தது என இருந்து விடாமல் இறந்தவர்களுக்காக மோட்ச தீபம் ஏற்ற வேண்டும்.
மோட்ச தீபம் என்பது இறந்து போனவர்களுக்காக செய்யப்படும் சிறு சடங்கு. கோவிலின் மேலே மாலை நேரங்களில் ஏற்றப்படும். மோட்ச தீபம் ஏற்றினால் இறந்தவர்களின் ஆத்மாவானது அந்த கோவிலில் உள்ள மூலவரின் அருளால் சாந்தியாகும் என்பது நம்பிக்கை.
எல்லா ஊர் கோவில்களிலும் மோட்ச தீபம் ஏற்றலாம். இருப்பினும் பித்ரு வழிபாட்டுக்கென தமிழ்நாட்டில் முன்னிலை வகிக்கும் கோவில் ராமேஸ்வரம் தான். அல்லது இதே மாவட்டத்தில் இருக்கும் திருப்புல்லாணி மற்றும் சேதுக்கரை இவை இரண்டும் பித்ரு வழிபாட்டுக்கென உள்ள ஸ்தலம் என்பதால் ராமேஸ்வரம் ராமநாதர் கோவில், திருப்புல்லாணி ஆதி ஜெகந்நாதர் கோவில் போன்றவை பித்ரு வழிபாட்டுக்காக உள்ள கோவில் என்பதால் இங்கும் மோட்ச தீபம் ஏற்றலாம்.
தஞ்சை மாவட்டம் சூரக்கோட்டை அருகில் உள்ள பரிதியப்பர் கோவில் பித்ரு வழிபாட்டுக்காக உள்ள கோவில் இங்கும் மோட்ச தீபத்தை ஏற்றலாம்.
கோவில்களில் சென்று மோட்ச தீபம் ஏற்ற சொன்னால் பல கோவில்களில் கோவில் சிப்பந்திகளே மேலே ஏறி கோவில் கோபுரம் அருகே ஏற்றுவார்கள். கோவில்களில் அதற்குரிய சிறிய கட்டணம் கட்டிவிட்டால் யார் பெயரில் மோட்ச தீபம் ஏற்றுகிறீர்களோ அவர்கள் பெயரில் ரசீது கொடுப்பார்கள். பின்பு கோவில் சார்பில் மோட்ச தீபம் ஏற்றுவார்கள்.