விஜய், அஜீத் இவர்கள் இருவருக்கும் ரசிகர்கள் போல யாருக்கும் ரசிகர்கள் கிடையாது. இவர்கள் போல சமூக வலைதளங்களிலும், நேரிலும் காரணமே இல்லாமல் மோதிக்கொள்ளும் ரசிகர்கள் யாரும் இல்லை.
அஜீத்தும், விஜய்யும் நெருங்கிய நண்பர்கள். அவர்களது பல நிகழ்ச்சிகளில் இதை சொல்லி இருக்கிறார்கள்.
இருப்பினும் அவர்களது ரசிகர்களின் சண்டை இது வரை குறைந்தபாடில்லை. அஜீத்தும் விஜய்யும் இணைந்து ஒரே ஒரு படத்தில் மட்டுமே சேர்ந்து நடித்தனர். இதுவே இன்று வரை பெரிய ரெக்கார்டு பிரேக் ஆகும்.
ஜானகி செளந்தர் என்ற இயக்குனர் இயக்கிய ராஜாவின் பார்வையிலே திரைப்படமே அந்த படமாகும்.
விஜய்யின் நெருங்கிய நண்பராக வரும் அஜீத், சில காட்சிகளில் மட்டுமே வருவார்.
விஜய்யும் அஜீத்தும் மிகப்பெரும் பிரபலமாகாத காலத்தில் இப்படத்தில் நடித்திருந்தனர். தற்போதைய காலக்கட்டத்தில் அதை நினைத்து பார்க்கவே முடியாது.