ஒரே நாடு ஒரே மொழி என இந்தி மொழியை இந்தியாவின் பொதுமொழியாக ஆக்க வேண்டும் என சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். அவரது இந்த கருத்துக்கு தமிழகத்தில் இருந்து பெரும் எதிர்ப்புக்குரல் எழுந்துள்ளது
இந்த நிலையில் பொதுமொழி குறித்து நடிகர் ரஜினிகாந்த் கூறியபோது, ‘ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு பொது மொழி என்பது மிகவும் முக்கியம் என்றும் பொது மொழி இருந்தால் நாட்டின் வளர்ச்சி நன்றாக இருக்கும் ஆனால் துரதிஷ்டவசமாக நம் நாட்டில் பொது மொழி என்பது சாத்தியம் இல்லை என்றும் ரஜினிகாந்த் கூறினார்.
மேலும் இந்தியை திணித்தால் தமிழ்நாடு மட்டுமின்றி தென்னிந்தியாவே ஏற்றுக்கொள்ளாது என்றும், இன்னும் கூறப்போனால் ஒருசில வட மாநிலங்களும் பொதுமொழியை ஏற்றுக்கொள்ளாது என்றும் ரஜினிகாந்த் கூறியுள்ளார். ரஜினியின் இந்த கருத்துக்கு அரசியல் தலைவர்கள் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.