தீராத சங்கடங்களை தீர்க்கும் மாவூத்து வேலப்பர்

By Abiram A

Published:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ளது மாவூத்து வேலப்பர் கோவில். இந்த கோவில் தல விருட்சமாக மாமரம் உள்ளது. இந்த கோவிலில் வீற்றிருந்து பல தீராத வினைகளை தீர்த்து வைக்கிறார் இங்குள்ள மாவூத்து வேலப்பர் என அழைக்க கூடிய முருகப்பெருமான்.

இவர் இங்கு சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்குள்ள மாவூற்றின் அடியில் இருந்து வற்றாத நீர் ஊற்றாக பொங்கி வருகிறது.

ஆடி அமாவாசை, தை அமாவாசை தினங்களில் அதிக மக்கள் இந்த கோவில் வந்து வழிபடுகின்றனர்.

இந்த மாவூற்று தண்ணீரில் குளித்து இங்கு சுயம்புவாக வீற்றிருக்கும் முருகனை வழிபட்டால் பல தீராத வினைகள் தீரும் என்பது ஐதீகம்.

இங்கு ஒரு காலத்தில் இருந்த பழியர் இனத்தினர் வள்ளிக்கிழங்கு பயிரிட்டு விவசாயம் செய்து வந்தனர். ஒருமுறை வள்ளிக்கிழங்கினை எடுக்க முடியாமல் அது ஆழத்தில் தோண்டியும் அதை எடுக்க முடியாமல் அதன் வேர் மட்டும் நீண்ட தூரம் செல்ல முடிவில் இந்த வேலப்பர் சிலை கிடைத்தது. பின்பு அவர்கள் அந்த பகுதியின் கண்டமனூர் ஜமீன் தாரிடம் சொல்ல அவரின் முயற்சியில் இந்த கோவில் கட்டப்பட்டது.

தேனி மாவட்டம் சென்றால் இந்த கோவிலை மறவாதீர்.

Tags: தேனி

Leave a Comment