உலகெங்கும் உள்ள தமிழர்கள் தம் இந்திய நாட்டின் ஆன்மிக பெருமையையும் தமிழ் நாட்டின் ஆன்மிக பெருமையையும் பறைசாற்றும் விதமாகவும் அவர்கள் செல்லும் நாடுகளில் மிகப்பெரிய ஆலயங்களை எழுப்புகின்றனர்.
அப்படியாக சிங்கப்பூரில் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றுதான் சிங்கப்பூர் மகா மாரியம்மன் கோவில். நம் நாட்டுக்கார தமிழர் ஒருவர் கட்டிய கோவில் இப்போது சிங்கப்பூரின் அடையாளமாகி விட்டது.
இங்கு கடலூரை சேர்ந்த நாராயணபிள்ளை என்ற பக்தர் தான் இக்கோவில் உருவாக காரணமானவர். கோவில் அமைப்பதற்கான நிலத்தை கிழக்கிந்திய கம்பெனி வழங்கி 1822ல் அனுமதி அளித்து 1823ல் வேலைகள் தொடங்கியது.
இங்கு சிறு அளவிளான விக்ரகம் ஒன்றை வைத்து ஒரு குடில் எழுப்பி முதலில் பூஜை நடந்திருக்கிறது. அந்த விக்ரகமே இன்று கோவில் மூலஸ்தானத்திற்குள் இருக்கும் விக்ரகம் ஆகும்.
சிங்கப்பூரின் அடையாளங்களில் இக்கோவிலும் ஒன்றாகி விட்டது, சீனர், மலேய மக்கள் பலரும் இக்கோவிலை பயபக்தியுடன் வணங்குகின்றனர். திருவிழாக்களில் கலந்து கொள்கின்றனர்.
நவராத்திரி விழாவும் இங்கு நல்ல முறையில் நடக்கும். இங்கு வாய்ப்பு இருப்பவர்கள் சென்று தரிசித்து விட்டு வரலாம் அம்மனின் அருள் பெறலாம்.