யாரையும் காயப்படுத்தாமல் ஜெயிக்க முடியாது- கவினின் நண்பர் சொன்ன அறிவுரை!!

By Staff

Published:

தொடங்கி  அதற்குள் 81 நாட்கள் ஆகிவிட்டதா? என பார்வையாளர்கள் கேள்வி எழுப்பும் வண்ணம் கிடுகிடுவென்று நாட்கள் ஓடி விட்டன, பிக் பாஸ் தொடங்கிய முதல் 2 நாட்கள் எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை என்பதுபோல் இருந்தனர், அதன்பின்னர் ஆரம்பித்த சண்டைக்கு ஒரு இடைவேளைதான் இந்த வாரம்.

மீண்டும் எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை என்பதுபோல், போட்டியாளர்கள் அனைவரும் ஒரே குஷியாக உள்ளனர்.

7bd0dcfc63b1d1aed57095e7e6c5243f

நேற்று காலை பிக் பாஸ் பிரீஷ் சொல்ல, என் ஃப்ரண்டை போல யாரு மச்சா? பாடல் ஒளிபரப்பானது. வந்தது கவினின் நண்பர்.

உள்ளே வந்த அவர் கவின் செய்வது தவறு என்று சுட்டிக் காட்டினார். மேலும் யாருக்காகவும் விட்டுக்கொடுக்க கூடாது. நீ உனக்காக ஜெயிக்க வேண்டாம். உனது அப்பா, அம்மா, மற்றும் எனக்காக ஜெயிக்க வேண்டும் என்று கூறியதோடு, யாரையும் காயப்படுத்தாமல் இந்த உலகத்தில் ஜெயிக்க முடியாது என்று அறிவுரை கூறினார்.

இனி உள்ள நாட்களில் விளையாட்டில் கவனம் செலுத்தி ஆடுமாறு கூறினார். கவின் தனது நண்பரின் அறிவுரையினை ஏற்பாரா? என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Leave a Comment