தமிழ் சினிமாவும் ஏழை பங்காளர்களும்-1

By Staff

Published:

ஏழை பங்காளர்கள் என்பவர் இருக்கிற பணக்காரர்களிடம் அடித்து இல்லாத ஏழைகளுக்குகொள்ளையடித்த பணத்தில் நிறைய அள்ளிகொடுப்பவர்

37f49e43b3430f4120299ccebeef7f46

மக்களுக்காக கொலை கொள்ளைகள் செய்பவர் என்று காலம் காலமாக‌தமிழ் சினிமா சித்தரித்து வருகிறது. அப்படிப்பட்ட படங்கள்பற்றி ஒரு சின்ன பார்வை.

குரோதம்

கிட்டத்தட்ட 80களில் வந்து பட்டிதொட்டியெங்கும் வெற்றிமுரசு கொட்டியது இந்தபடம்.

இந்த படத்தின் மூலம்தான் பிரேம் என்ற நடிகர் அறிமுகமானார் பின்னாளில் இவர் குரோதம் பிரேம் என்றுஅடைமொழியுடன் அழைக்கப்பட்டார்.

சமூக குற்றங்களால் பாதிக்கப்பட்ட ஒருவன் கையில்துப்பாக்கி எடுக்கும் கதை அநியாயம் செய்பவர்களை அடுத்த நிமிடமே சுட்டுத்தள்ளுகிறார். இவரை பிடிக்கமுடியாமல் வழக்கம் போல் போலீஸ் திணறுகிறது.

இவரை பிடிக்க இன்ஸ்பெக்டர் ஆக வரும் அசோகன் நிறைய முயற்சி செய்கிறார் இப்படியாக கதை நீளும் பின்னாளில் பிரேம் வெற்றிகரங்கள் உட்பட‌ சில படங்களில் நடித்தார்

மலையூர் மம்பட்டியான்

ராஜசேகர் இயக்கத்தில் வெளிவந்தபடம் இது தியாகராஜன் மலையூர் மம்பட்டியானாக நடித்திருப்பார் தானியங்கள் உட்படசில பொருட்களை பல பெரிய மனிதர்களின் குடோனில்இருந்து எடுத்து இல்லாத ஏழைமக்களுக்கு கொடுத்து வருவார் அவரைபிடிக்க ஜெய்சங்கர்தலைமையில் போலீஸ் டீம் கடைசியில் மம்பட்டியான் போலீசாரால் சுடப்பட்டு இறந்து விடுவார்

நான்சிகப்பு மனிதன்

மேலை நாட்டு ஏழைபங்காளன் ராபின்ஹூட் வேடத்தில் ரஜினிகாந்த் .தன் முன்னேயே கற்பழித்து கொல்லப்பட்ட தங்கை, மற்றும் குடும்பத்துக்காக துப்பாக்கி தூக்கும் பேராசிரியராக ரஜினிகாந்த் நடித்திருப்பார். கடைசியில் அனைத்து அயோக்கியர்களையும் கொல்கிறார்.

மக்களும்அவரை தலையில் தூக்கிகொண்டாடுகிறார்கள் குரோதம் படத்திற்கும் இந்த படத்திற்கும் பெரிய‌வித்தியாசம் எதுவும் இல்லை இந்த படத்தில் கோர்ட் சீன்கள் இருக்கும் குரோதம் படத்தில் கோர்ட் சீன்கள் எதுவும் இருக்காது வித்தியாசம் அவ்வளவே.

சீவலப்பேரிப்பாண்டி

இக்கதையை தொகுத்து எழுதியவர் எழுத்தாளர் செளபா ஆவார். இவர் சமீபத்தில் தன் மகனையே கொலை செய்தார் என்ற குற்றத்துக்காக ஜெயிலுக்கு சென்று அங்கு உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார்.

நெல்லை மாவட்டத்தில் சீவலப்பேரியில் நடந்த உண்மை சம்பவமே இந்த சீவலப்பேரி பாண்டி படத்தின் கதையாகும். மிக அழகாக இயல்பாக நெல்லை மாவட்ட பேச்சு வட்டார வழக்கோடு இந்த கதையை செளபா எழுதி இருந்தார்.

அதே நடையோடு அதே வட்டார வழக்கோடு இயக்குனர் ராஜேஸ்வர் திரைக்கதை எழுத, இயக்குனர் பிரதாப்போத்தன் திறம்பட இயக்கி இருந்தார் இப்படத்தை.

நெப்போலியன் இப்படத்தில் சீவலப்பேரி பாண்டியாக நடித்திருந்தார். நெப்போலியனின் நடிப்புக்கு இணையாக இப்படத்தில் இன்ஸ்பெக்டராக நடித்த ஜிடி ரமேஷின் நடிப்பும் மிகவும் பேசப்பட்டது.

ஏழை பங்காளர்கள் பதிவின் தொடர்ச்சி நாளை.

Leave a Comment