400 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்த படங்கள்

By Staff

Published:

இப்போது உள்ள படங்கள் எவ்வளவு சுவையான படங்களாக இருந்தாலும் அதிகபட்சம் ஒரு வாரம் மட்டுமே ஓடுகிறது. அதற்கு மேல் அந்த படங்கள் ஓடுவது மிக சிரமமாக இருக்கிறது.

39a0bf9ee483402eb4093b467f915226

பெரிய நடிகர்களின் படங்கள் கூட இரண்டு வாரங்கள் மேல் ஓடுவதில்லை. சினிமா இயக்குனர்கள் பெருகி விட்டதும், படங்கள் அதிகரித்து விட்டதும், போதிய தியேட்டர்கள் கிடைக்காமையாலும், அடுத்தடுத்து படங்கள் வர ரெடியாக இருப்பதாலும், படங்கள் சில நாட்களுக்கு மேல் ஓடுவதில்லை.

1980களில் நிலைமை அப்படியில்லை. 90களின் இறுதி வரை காதலுக்கு மரியாதை, பூவே உனக்காக போன்ற படங்கள் 200 நாட்கள் தரமாக ஓடிய படங்கள். நாளாக நாளாக 100, 50 என நாட்கள் குறைந்து இப்போது ஒரு வாரம் ஒரு படம் தியேட்டரில் ஓடினால் அது சிறந்த படம் என்றாகி விட்டது.

இயக்குனர் ஆர் சுந்தர்ராஜன் முதன் முதலாக இயக்கிய பயணங்கள் முடிவதில்லை திரைப்படம் யாரும் எதிர்பார்க்காமல் 400 நாட்கள் ஓடியது.

இளையராஜாவின் இசை, வைரமுத்துவின் பாடல்கள், ஆர் சுந்தர்ராஜனின் சிறப்பான இயக்கம் இந்த படத்தை எங்கோ கொண்டு சென்றது.

மோகன் அந்த நேரத்தில்தான் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார். இந்த படத்தால் மோகன் முன்னணி நடிகராக உயர்ந்தார்.

அதே போல் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு பாடல்களாலும், கவுண்டமணியின் காமெடியாலும், சிறந்த ஜனரஞ்சக கதை அமைப்பாலும் கரகாட்டக்காரன் படம் மதுரை நடனா திரையரங்கில் 486 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.

இந்த படத்தின் மூலம் ராமராஜன் இல்லாத தமிழ் சினிமா இல்லை என்ற நிலை உருவானது.

மோகன், ராமராஜன் இருவரின் படங்களை பார்த்து பிரமித்துப்போன ரஜினியே, நான் பெங்களூருக்கே மூட்டை கட்ட வேண்டியதுதான் என அந்த நாட்களில் நகைச்சுவையாக கூறியது வரலாறு.

Leave a Comment