சென்னை மயிலாப்பூரில் உள்ளது புகழ்பெற்ற முண்டககன்னியம்மன் கோவில். இந்த கோவில் மிக புகழ்பெற்ற கோவில். இதன் தல விருட்சம் ஆலமரமாகும். எல்லா சிவன் கோவில்களிலும் சிவனுக்குத்தான் ஐப்பசி பெளர்ணமியில் அன்னாபிசேகம் நடக்கும் இந்த கோவிலில் மட்டும் அம்மனுக்கு நடக்கிறது.
இந்த அம்பாள் சுயம்புவாக உருவானவள் இந்த அம்மனின் உருவத்துக்கு நாக கிரீடம் அணிவித்து இரண்டு கரங்களுடன் அமர்ந்த கோலத்தில் காட்சி அளிக்கிறார்.
மிகவும் சக்தி வாய்ந்த இந்த் அம்மனை வேண்டிக்கொள்வதற்காக நிறைய பெண்கள் இக்கோவிலுக்கு படையெடுத்து வருகிறார். விரும்பியதை நிறைவேற்றி கொடுக்கும் அம்மனாக இந்த அம்மன் இருக்கிறாள்.
இங்கு வேண்டிக்கொள்பவர்கள், மஞ்சள், சந்தனம், குங்குமம், காப்பு மற்றும் அன்னாபிசேகம் செய்வது விசேஷம். இங்கு பொங்கல் தயாரிப்பதென்றால் கூட பசுஞ்சாணத்தில் செய்த வறட்டியை பயன்படுத்திதான் பொங்கல் தயாரிக்கின்றனர்.
ஆடி மாத வெள்ளி, தை மாத வெள்ளிக்கிழமைகள் இங்கு விசேஷமாகும் இந்த நாட்களில் 108 திருவிளக்கு பூஜை, ஆயிரத்தெட்டு பால்குடம் போன்றவை பிரபலமாகும்.
வேப்பிலையை ஆடையாக அணிந்து சன்னதியை வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தும் வழக்கம் இங்கு உள்ளது,
முற்காலத்தில் இங்கு இருந்த தாமரைக்குள ஆலமரத்தின் அடியில் அம்பாள் சுயம்புவாக அவதரித்ததாக சொல்வதுண்டு. முண்டகம் என்றால் தாமரை என்று பொருள்.
கேட்கும் விசயங்களை நிறைவேற்றி தரும் முண்டக கன்னியம்மனின் வாசல் வந்து வணங்குங்கள் உங்கள் வினைகளையும் குறைகளையும் அவள் தீர்ப்பாள்.