இனிக்கும் இளமை படத்தின் மூலம் அறிமுகமான விஜயகாந்த் பல்வேறு விதமான படங்களில் நடித்து முன்னணி நடிகரானார். இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன் இயக்கிய வைதேகி காத்திருந்தாள் திரைப்படம் இவரின் திரைப்பட வாழ்வுக்கு ஒரு மைல்கல்.
தொடர்ந்து திரைப்பட கல்லூரி மாணவர்களின் படங்களான ஊமை விழிகள், உழவன் மகன் உள்ளிட்ட படங்களின் வெற்றி இவரை ஊக்கப்படுத்தின.
இயக்குனர் கே சுபாஷ் இயக்கத்தில் இவர் நடித்த சத்ரியன் மிக அற்புதமானதொரு திரைப்படமாகும்.
ஆர்.கே செல்வமணி இயக்கத்தில் இவர் நடித்த புலன் விசாரணை திரைப்படம் மிகப்பெரும் வெற்றிப்படமாகும்.
இவரின் 100வது படமாக கேப்டன் பிரபாகரன் படம் வந்தது அது இவருக்கு மிகப்பெரும் வெற்றியை தேடித்தந்தது. இரண்டு படங்களுக்கும் இயக்குனர் ஆர்.கே செல்வமணி.
ஆர்வி உதயக்குமார் இயக்கிய சின்னக்கவுண்டர் படமும் இவரது திரையுலக வாழ்வில் ஒரு மைல் கல்லாக அமைந்த படமாகும்.
தொடர்ந்து மாநகரகாவல், பரதன், தாய்மொழி,வல்லரசு, சுதேசி, விருதகிரி உள்ளிட்ட பல படங்களில் நடித்த கேப்டன் ஒரு கட்டத்தில் அதாவது 2005ல் தேமுதிக என்ற அரசியல் கட்சியை தொடங்கி அதை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
இன்று கேப்டன் விஜயகாந்தின்68வது பிறந்தநாள்