வருடா வருடம் உத்ராயணம், தட்சிணாயணம் காலத்தில் வரும் தை அமாவாசையும் ஆடி அமாவாசையும் மிக புகழ்பெற்ற அமாவாசைகளாகும். இந்த நாட்களில் முன்னோர்களை நினைத்து புண்ணிய தீர்த்தங்களில் நீராடி முன்னோர்களுக்குரிய தர்ப்பணம் செய்வதும் அவர்களை நினைத்து வேண்டுவதும். முன்னோர்களின் ஆசியை நமக்கு பல மடங்கு பெற்றுத்தரும்.
இன்று கொரோனா காரணமாக ராமேஸ்வரம், சேதுக்கரை, சதுரகிரி என நீராடும் புண்ணிய தீர்த்தங்கள் அடைக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் வீட்டிலேயே ஏதாவது தீர்த்த யாத்திரை சென்று வந்த புனித நீர் இருந்தால் அதை தண்ணீரில் கலந்து நீராடலாம்.
வீட்டில் உள்ள தெய்வங்களுக்கு பூ மாலை அணிவித்து முன்னோர்களுக்கும் அணிவித்து அவர்களை மானசீகமாக வணங்கலாம்.வீட்டில் இறந்தோர்களுக்கு பிடித்ததை பண்டங்களை அவர்கள் புகைப்படம் முன் வைத்தும் வணங்கலாம். தன்னுடைய தோஷங்கள் விலகவும் தன்னுடைய முன்னோர்களின் தோஷங்கள் விலகவும் அவர்களின் நற்கதிக்காவும் வேண்டிக்கொள்ளலாம்.
இன்று முன்னோர்களை வழிபட மறவாதீர்கள்.