ஹிந்துக்களின் புனித நூலாக கருதப்படுவது பகவத் கீதை இதை எழுதியவர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். மஹாபாரத போரின்போது இவர் போர்க்களத்தில் உபதேசித்த கருத்துக்கள்தான் பகவத் கீதையின் சாராம்சம்.
ஸ்ரீ கிருஷ்ணர் ஆவணி மாத ரோகிணி நட்சத்திரத்தில் மதுரா நகரில் பிறந்தார். மாமா கம்சனின் கொடுமையால் சிறையில்தான் ஸ்ரீ கிருஷ்ணரின் பிறப்பு நிகழ்ந்தது.
கோகுலாஷ்டமியை முன்னிட்டு உத்திரபிரதேச மாநிலம் மதுரா நகரில் உள்ள கிருஷ்ணர் கோவில் அவர் பிறந்ததாக சொல்லப்படும் சிறைச்சாலை போன்றவை அலங்கரிக்கப்பட்டு உள்ளது.
அனைத்து பக்தர்களும் தரிசனம் செய்யும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
ஊரே ஒளி வெள்ளத்தில் மிளிர்கிறது.