இந்த ஸ்லோகத்தை தினசரி சொல்லி வாருங்கள் மனதைரியம் கிடைக்கும்.
வீரலட்சுமி
அஷ்டபாஹுயுதாம் லக்ஷ்மீம் ஸிம்ஹாஸன வரஸ்திதாம்
தப்த காஞ்ச ந ஸங்காசாம் கிரீட மகுடோஜ்வலாம்
ஸ்வர்ண கஞ்சுக ஸம்யுக்தாம் கந்த வீரதரம் ததா
அபயம் வரதம் சைவ புஜயோஸ் ஸவ்ய வாம்யோ: சக்ரம்
சூலம் ச பாணம் ச சங்கம் சாபம் கபாலகம்
தததீம் வீரலக்ஷ்மீம் ச நவதாலாத்மிகாம் பஜே
– வீரலக்ஷ்மி ஸ்லோகம்
பொதுப் பொருள்: எட்டுத் திருக்கரங்களுடைய தேவியே. சிம்மாசனத்தில் கம்பீரமாக எழுந்தருளியுள்ளவளே. அதிகார தோரணை கொண்டவளே. ஒளி வீசும் ஆபரணங்களைப் பூண்டவளே. அபய வரதம் காட்டும் கரங்களுடன் மற்ற கரங்களில் சூலம், சங்கு, சக்கரம், வில், அம்பு, கபாலம் ஏந்தி வீரத்தோடு தோற்றமளிப்பவளே, தங்களைப் சரணடைந்தோருக்கு சௌபாக்கியங்களோடு துணிவையும், மன உறுதியையும் அருள்பவளே வீரலட்சுமித் தாயே தங்களை சரணடைகிறேன்.