தற்போது நம் தமிழகத்தில் அதிக அளவு உணவகங்கள் காணப்படுகின்றன. அதுவும் இரவு நேர உணவகங்களின் எண்ணிக்கையானது நம் தமிழகத்தில் அதிகரித்து உள்ளது. மேலும் உணவகங்களில் பெரும்பாலாக மக்களால் விரும்பி சாப்பிடப்படும் உணவு என்றால் அதனை ப புரோட்டா என்றே கூறலாம். மேலும் இந்த புரோட்டா அடைமொழியாக கொண்டு தமிழ் சினிமாவில் தற்போது நட்சத்திர காமெடியனாக வலம் வருகிறார் நடிகர் சூரி.
மேலும் அவர் நடித்த வெண்ணிலா கபடிக்குழு என்ற திரைப்படத்தில் புரோட்டா பந்தயத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் மிகவும் ஃபேமஸ் ஆனார். அதன் பின்னர் அவருக்கு பட வாய்ப்புகள் மிகுதியாக கிடைத்தது. மேலும் பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பாக நடிகர் சூரியின் சகோதரர் வீட்டில் திருமண விழா நடைபெற்றது. அதில் ஏராளமானோர் பங்கு பெற்றிருந்தனர். மேலும் பல நட்சத்திரங்களும் இந்த திருமண விழாவில் கலந்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் பலரும் எதிர்பாராதவிதமாக அந்த திருமண விழாவில் நகை திருட்டு போனது.
மேலும் 10 சவரன் நகை திருடு போனதாக சூரியின் மேலாளர் புகார் அளித்திருந்தார். அதனைத் தொடர்ந்து விசாரித்ததில் அங்கிருந்த விக்னேஷ் என்ற இளைஞர் நகையை திருடியதாக கூறப்படுகிறது. மேலும் அவரிடம் விசாரித்ததில், தான் பேமஸ் ஆக வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்ததாக அவர் கூறியிருந்தார்.
அதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்ட நிலையில் நேற்றைய தினம் அவர் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால் பல நிபந்தனைகள் அவருக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நடிகர் சூரியின் இல்ல திருமண விழாவில் நகை திருடியதாக கைது செய்யப்பட்ட விக்னேஷ் என்பவருக்கு தற்போது நிபந்தனை ஜாமீன் வழங்கியது ஹைகோர்ட்.
அதன்படி இனி குற்றச்செயல்களில் ஈடுபட மாட்டார் என்று விக்னேஷின் தந்தை மற்றும் தாத்தா அளித்த உறுதிமொழி பத்திரத்தை எடுத்து அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனாலும் 60 நாட்களுக்கு அருகில் உள்ள காவல் நிலையத்தில் காலை மற்றும் மாலையில் விக்னேஷ் கையெழுத்திடவும் நீதிபதிகள் நிபந்தனை அளித்துள்ளனர்.