ஒவ்வொரு ஆண்டும் மஹாளய பட்ச அமாவாசையானது அமாவாசைக்கு 15 தினங்கள் முன் வரும் பிரதமை திதியில் இருந்து தொடங்குகிறது. இந்த 15 நாட்களும் நம் முன்னோர்கள் நம்முடன் இருப்பார்கள் என்பது ஐதீகம்.
தற்போது கொரோனா காலம் என்பதால் பல கடற்கரைகள், வழிபாட்டுத்தலங்கள் அடைக்கப்பட்டுள்ளது இதனால் பலர் குழப்பமடைகின்றனர். முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் செய்ய முடியவில்லை என கவலையடைகின்றனர்.
இப்படி அவர்களை நினைத்தாலே போதும். ஊரே உலகமே அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படும்போது, எல்லை மீறிய வியாதி பரவி வரும்போது உங்களால் ஒன்றும் செய்ய முடியாதல்லவா அதற்காக ஒன்றும் பயப்பட தேவையில்லை.
பசியோடிருக்கும் ஒருவருக்கு நீங்கள் செய்யும் தானம் உங்களுக்கு கோடி புண்ணியத்தை பெற்றுத்தரும்.
அதனால் நாளை மஹாளய பட்ச அமாவாசையன்று கோவில்கள் நடை அடைக்கப்பட்டிருந்தாலும் தீர்த்த ஸ்தலங்களுக்கு செல்ல முடியாவிட்டாலும் ஆண்கள் எள்ளும் தண்ணீரை இறைத்து விட்டு, வீட்டில் சைவ சமையல் செய்து சாப்பிடலாம்.
நாலு பேருக்கோ நாற்பது பேருக்கோ அன்னதானம் செய்யலாம். பசி என்று உள்ளவர்களுக்குதான் செய்யவேண்டும். மனிதனுக்குத்தான் செய்ய வேண்டும் என்றில்லை நாலு தெரு நாய்களுக்கு சாப்பாடு வாங்கி வைத்தாலும் பிஸ்கட் வாங்கி வைத்தாலும் அது அனைத்துமே புண்ணியத்தை தான் தரும்.
அதனால் நாளை உணவுதானத்தை எவ்வகையிலேனும் யாருக்காவது செய்து முன்னோர்களின் ஆசியை பெறுங்கள்.
இதனால் உங்கள் ஜாதகத்தில் முன்னோர்கள் ரீதியான தோஷங்கள் அனைத்தும் விலகும்.