இன்று சித்ரா பவுர்ணமி தினம்

By Staff

Published:

388c5017b82dadee5d3a0f148e359790-2

மாதம் தோறும் வரும் பெளர்ணமி தினம் மிக ஒரு அற்புதமான திருநாளாக கருதப்படுகிறது. பெளர்ணமி தினத்தில் கோவில்கள் அனைத்திலும் விசேஷ வழிபாடுகள் நடைபெறும். திருவண்ணாமலை, பழனி, திருப்பரங்குன்றம் போன்ற மலைக்கோவில்களில் கிரிவலமும், சித்தர்களின் ஜீவசமாதியில் வழிபாடுகளும் சிறப்பாக நடைபெறும்.

ஆனால் மற்ற பவுர்ணமிகளில் இருந்து தனித்து வருவது சித்ரா பெளர்ணமி ஆகும். தமிழ் மாதத்தின் புதிய தமிழ் ஆண்டின் முதல் பவுர்ணமியாக இது வருவதால் இந்த பவுர்ணமிக்கு தனி மதிப்பு.

இந்த பவுர்ணமி தினத்தில் கோவிலுக்கு சென்று நாம் விரும்பிய வழிபாட்டை செய்துகொண்டால் உடனடி நன்மை பயக்கும். இந்த சித்ரா பவுர்ணமி தினத்தை ஒட்டிதான் மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குதலும். வைகை ஆற்றில் உள்ள பெருமாள் கோவில்களில் எல்லாம் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவங்களும் நடைபெறுகிறது.

இன்று கொரோனா கட்டுப்பாட்டின்படி கோவில்கள் அடைக்கப்பட்டாலும் வீட்டில் இருந்தாவது பூஜை செய்யுங்கள்.

Leave a Comment