விளக்கு துலக்க உகந்த நாட்கள் என்ன

By Staff

Published:

106cd78b4252e13b72eaffd32e7494ad

வீட்டில் மங்களகரமானது விளக்கு. பூஜையறையில் குத்துவிளக்குகள் ஏற்றி வழிபடுவதே பெரும் ஆனந்தத்தை தரும் ஒரு விசயமாகும். அப்படிப்பட்ட விளக்கை சுத்தம் செய்வதற்கு சில நாட்கள் உண்டு அப்படிப்பட்ட நாட்கள் என்ன என்பதை பார்ப்போம்.

குத்துவிளக்கை ஞாயிறு, திங்கள், வியாழன், சனிக்கிழமைகளில் துலக்குவது நல்லது. இதற்குக் காரணம், திருவிளக்கில் திங்கள் நள்ளிரவு முதல் புதன் நள்ளிரவு வரையில் தனயட்சணி (குபேரனின் பிரதிநிதியான பதுமநிதியின் துணைவி) குடியிருக்கிறாள். செவ்வாய், புதன் கிழமைகளில் விளக்கைக் கழுவினால் இவள் வெளியேறிவிடுவாள் என்பது ஐதிகம். வியாழன் நள்ளிரவு முதல் வெள்ளி நள்ளிரவு வரை விளக்கில் குபேர சங்க நிதி யட்சணி (குபேரனின் பிரதிநிதியான சங்கநிதியின் துணைவி) குடியேறுகிறாள். எனவே வெள்ளிக்கிழமை துலக்குவதைத் தவிர்த்து, வியாழன் முன்னிரவில் துலக்குவது நல்லது.

Leave a Comment