இசையமைப்பாளர் எம்.எஸ் விஸ்வநாதனின் 92வது பிறந்த நாள் இன்று. தமிழ் சினிமாவில் இசையமைப்புகளில் பல சாதனைகளை படைத்தவர் இவர். கவிஞர் கண்ணதாசனும் இவரும் நெருங்கிய நண்பர்கள். கண்ணதாசன் ஒரு உரையில் இவரை இவ்வாறு குறிப்பிட்டு பேசுகிறார்.
என் நண்பன் விஸ்வநாதன் அவனுக்கு ஒண்ணும் தெரியாது காபூல் மாதுளைய பத்தி கேட்டேன் காபூல் மாதுளையா அது எங்கே இருக்கு என கேட்பான் அந்த அளவு அவன் அப்பாவி. ஆனா ரஷ்யாவில் ஒரு இசை விழாவில் யாருக்கும் தெரியாத இசைக்கோர்வையை அவன் வாசித்தான் அங்கிருந்தவர்கள் மிரண்டு போயினர்.
அதாவது அவன் எடுத்துக்கொண்ட கொள்கையில் தீராத பிடிப்பு உள்ளவன். அடுத்த விஷயத்தை பற்றி அறிந்து கொள்ள மாட்டான். அதுதான் அந்த காபூல் மாதுளை உதாரணம் அவனுக்கு தெரிந்தது மியூசிக், அந்த துறையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்வான். அடுத்த விசயங்கள் பற்றி கண்டு கொள்ளவே மாட்டான் என எம்.எஸ்.வி பற்றி பெருமையாக கூறி இருப்பார்.
எம்.எஸ்.வியின் பாடல்கள்தான் இசைஞானி இளையராஜாவுக்கு இன்ஸ்பிரேஷன் என்று கூட இளையராஜா பல மேடைகளில் சொல்லி இருக்கிறார்.
இளையராஜாவும் இவரும் சேர்ந்து இசையமைத்த மெல்ல திறந்தது கதவு, விஷ்வ துளசி, செந்தமிழ் செல்வன் போன்ற படங்களை நான் மறக்க முடியாது.
திரைப்பாடல்கள் பலவற்றை இவர் இசைத்திருக்கிறார். இவர் இசையமைத்து பாடிய கிருஷ்ண கானம் பக்தி ஆல்பம் மிகப்பெரிய ஹிட். அதில் வரும் அமரஜீவீதம் பாடலை இவர் மிக அருமையாக பாடி இருப்பார்.
இவர் அமரர் ஆனாலும் அமரஜீவிதம் போன்ற இவர் இசையமைத்த பல இசைக்கோர்வைகளால் இன்னும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.