நீ நடந்தால் நடையழகு.. நீ சிரித்தால் சிரிப்பழகுன்னு சினிமா நடிகனை பற்றி பாடக்கேட்டிருக்கோம். ஆனா, விஷ்ணுபகவானின் அவதாரங்கள் குடிக்கொண்டிருக்கும் கோவில்களில் எவை அழகுன்னு தெரியுமா?!
அரங்கனுக்கு நடையழகு-
ஸ்ரீ ரங்கநாதரின் நடையழகு சேவை.
வரதனுக்கு குடையழகு-
காஞ்சி வரதராஜரின் திருக்குடை.
அழகருக்குப் படையழகு-
கள்ளழகருடன் மதுரைக்கு வரும் படை.
மன்னாருக்கு தொடையழகு-
ஸ்ரீவில்லிபுத்தூர் ரங்கமன்னாருக்கு ஆண்டாள் சூடித்தரும் மாலை(தொடை- மாலை) அழகு.
அமுதனுக்கு கிடையழகு-
குடந்தை ஆராவமுதனின் கிடை அதாவது பள்ளிகொண்ட திருக்கோலம் அழகு.
நாரணர்க்கு முடியழகு-
திருநாராயணபுரத்து செல்லப் பிள்ளையின் வைரமுடி சேவை அழகு.
திருமலையான் வடிவழகு-
திருப்பதி வேங்கடவனின் தோற்றம் அழகு.
சாரதிக்கு உடையழகு-
திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாளின் ரதசாரதி உடையலங்காரம் அழகு.