பிரபல தபேல கலைஞர் கண்ணையா இவர் எம்.எஸ்.வி காலத்திலிருந்து தபேலா வாசித்து வருகிறார். இளையராஜா சினிமா உலகுக்கு வந்த பிறகு இளையராஜா இசையில் அதிக பாடல்களுக்கு தபேலா வாசித்திருக்கிறார்.
இசைஞானியும் இவரும் ஜி கே வெங்கடேஷ் இசையமைப்பில் ஒன்றாக இசைக்கருவிகள் வாசித்தவர்கள்.
இளையராஜாவுடன் மிக நெருக்கமாக இருந்தவர் இவர். இவர் இல்லை என்றால் பல பாடல்களை கம்போஸிங்கை இளையராஜா தள்ளி வைத்து விடுவாராம்.
நெஞ்சத்தை கிள்ளாதே படத்தில் இடம்பெற்ற பருவமே புதிய பாடல் பாடு என்ற பாடல் மிகப்பிரபலம். இப்பாடலில் ஆரம்பத்தில் இருந்து டக் டக் டக்கென்று ஓடும் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும்.
இந்த சத்தம் இயற்கையாக அமைந்தது எந்த கருவிகளும் இல்லாமல் தன் தொடையிலேயே பாடல் முழுவதும் தட்டிக்கொண்டே இருந்தாராம் தபேலா கண்ணையா அந்த சத்தம் பாடல் முழுவதும் கேட்டுக்கொண்டே இருக்கும். இவர் தொடை தட்டி முடித்ததும் தொடை இரண்டும் கடுமையாக சிவந்து போய் விட்டதாம் காலம் கடந்தும் இக்கால யுவன் யுவதிகளையும் இப்பாடல் ஈர்க்கிறது என்றால் அந்த புகழ் இசையமைத்த இளையராஜாவுக்கும் அதை தொடை தட்டி மெருகேற்றிய தபேலா கண்ணையா அய்யாவுக்குமே போய் சேரும்.
என்னுள்ளில் எங்கோ, கண்ணே கலைமானே, மலையாளப்பாடலான தும்பி வா தும்பக்குடத்தின் பாடல் உட்பட நாம் இன்று கேட்கும் பெரும்பாலான இளையராஜா பாடல்களுக்கு தபேலா வாசித்து மெருகேற்றியவர் அய்யா தபேலா கண்ணையா.
சில வருடங்களாக வயோதிகம் காரணமாக எதிலும் கலந்து கொள்ளாமல் இருந்த இவர் வயோதிகம் காரணமாக நேற்று இயற்கை எய்தினார்.
இவரின் உடலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா நேரில் அஞ்சலி செலுத்தினார்.
இவரின் இழப்பு இசையுலகுக்கு ஒரு பேரிழப்பு என்றே சொல்லலாம்.