கே.பாலச்சந்தரை அறிந்த அளவுக்கு வீணை எஸ்.பாலச்சந்தரை பலர் அறிந்திருக்க மாட்டார்கள் இவரின் படங்கள் எல்லாமே த்ரில்லர் ரகம்தான். சுதந்திர போராட்ட காலம் உலகபோர் நடைபெற்ற காலம் முதலியவற்றை தழுவி அந்த நாள் என்ற படம் ரிலீசானது படத்தில் பாடல்களே இல்லாமல் முழுவதும் மர்மம் நிரம்பிய படம் இது. சிவாஜி கணேசன் நடித்த படமிது.
1934லேயே சினிமாவுக்கு வந்து விட்ட பாலச்சந்தர் வீணை வாசிப்பதில் நிபுணத்துவம் உள்ளவர். இவர் இயக்கிய அந்த நாள், என் கணவர்,பூலோக ரம்பை, நடு இரவில் உள்ளிட்ட படங்கள் எல்லாமே மர்மம் நிறைந்தது.
முக்கியமாக இவர் இயக்கிய பொம்மை படத்தில் படம் முடிந்த உடன் படத்தில் பங்கு பெற்ற அனைத்து கலைஞர்களையும் அவர்களின் பெயரை சொல்லி அறிமுகப்படுத்துவார். இது கொஞ்சம் வித்தியாசமான டைட்டிலாக அறியப்பட்டது.
இவர் இயக்கிய பொம்மை படம் இவருக்கு அதிக பெயரை வாங்கி கொடுத்தது.
1970கள் வரை சினிமா பீல்டில் மர்ம இயக்குனராக வலம் வந்தவர் இவர்.கடந்த 1990ம் ஆண்டு மறைந்தார் இவர்.