நம் பதிவுகளில் பலமுறை பார்த்த கோவில்தான் உத்திரகோசமங்கை. இருப்பினும் இக்கோவில் பற்றி திரும்ப திரும்ப நினைவூட்ட காரணமே உலகத்தில் தோன்றிய முதல் சிவன் ஆலயம் இது என்பதனாலும், சிவன் பார்வதியின் சொந்த ஊர் இது என்பதனாலும்தான். இக்கோவிலுக்கு வருவதற்கு பெரும்புண்ணியம் செய்திருக்க வேண்டும்.
மாணிக்கவாசகர் இருபிறவியில் இத்தல இறைவனை பூஜித்திருக்கிறார்.
இன்னும் பல மகத்துவம் நிறைந்த திரு உத்திரகோசமங்கையில் சிவராத்திரி விழாவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இத்தலம் வந்தாலே சிறப்புதான் அதிலும் சிவராத்திரி போன்ற நாட்களில் வந்து இரவு முழுவதும் தங்கி இருந்து, இங்கு மூலவராக வீற்றிருக்கும் மங்களநாதர் ஸ்வாமியையும், மங்கள நாயகியையும் இரவு முழுவதும் பக்தி பாசுரங்கள் பாடி வணங்கி அவர்களுக்கு நடக்கும் நான்கு கால பூஜைகளையும் கண்டுகளித்தால் வாழ்வில் என்றென்றும் ஆனந்தமே.
ஒருமுறையாவது திரு உத்திரகோசமங்கையில் நடக்கும் சிவராத்திரி பூஜையில் கலந்துகொள்ளுங்கள். சிவபெருமானின் சொந்த ஊர் அல்லவா இது. அவரின் ஊர் அவர் கோவில் என்பதை நியாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.