குற்றாலநாதர் கோவில்- மஹா சிவராத்திரி ஸ்பெஷல்

By Staff

Published:

88be2703d193ba6b953e3050f9bd857a

எல்லோரும் குளு குளு சீசனை  தமிழ்நாட்டில் செல்லும் முக்கிய இடங்களில் குற்றாலமும் உண்டு. இங்கு ஐந்தருவி, புலியருவி, செண்பகாதேவி அருவி,பழையகுற்றாலம், மெயினருவி என பல அருவிகள் உள்ளன. இங்கு சீசனை அனுபவிக்க வருவோர் குளித்துக்கொண்டே இருப்பர். அவ்வளவு இயற்கை எழில் சூழ்ந்த இடம் இது. தென்காசி மாவட்டத்தில் இது உள்ளது.

இந்த குற்றாலத்தில் மெயினருவியில் குளித்து விட்டு வெளியே வரும்போது நம் கண்களுக்கு பிரமாண்டமாய் தென்படுவது குற்றாலநாதர் கோவில் இது பஞ்சசபைகளில் ஒரு கோவில் ஆகும்.

முன்பு ஒரு காலத்தில் இக்கோவில் விஷ்ணு கோவிலாக இருந்ததாகவும் இங்கு தரிசிக்க வந்த அகத்தியரை வைணவர் இல்லை என உள்ளே விட மறுத்ததாகவும் அதனால் வருத்தமடைந்த அகத்தியர் அருகில் உள்ள இலஞ்சி முருகன் கோவில் சென்று தன் வருத்தத்தை சொல்லி வழிபட்டபோது அகத்தியரை முருகன் மீண்டும் குற்றாலநாதர் கோவிலுக்கு சென்று வழிபட சொன்னதாகவும் அங்கு கண்களை மூடி சிவனை நினைத்து பிரார்த்தனை செய்ய சொல்லியும் முருகப்பெருமான் உரைக்க அதன்படியே வந்து அகத்தியரும் செய்ய திருமாலின் சிலை லிங்க திருமேனியாக ஆகி விட்டதாம் இது வரலாறு.

இந்த தலத்தில் பலா மரம் ஸ்தல விருட்சமாக உள்ளது. பலா எப்போதும்  இந்த மரத்தில் காய்த்துக்கொண்டிருப்பது சிறப்பு. இந்த கோவிலில் இருந்து 1கிமீட்டரில் நடராஜபெருமானுக்கு தனிக்கோவில் உள்ளது  குற்றாலநாதர் கோவிலோடு சேர்ந்த கோவில்தான் இது. இங்கு நடராஜருக்கு தனி சன்னதி உள்ளது இதுதான் பஞ்ச சபைகளில் சித்திரசபையாக வணங்கப்படுகிறது.

எல்லா கோவில்களையும் போலவே இங்கும் சிவராத்திரி நன்றாக கொண்டாடப்படும்.ஒருமுறை இங்கு வந்து சிவராத்திரிக்கு குற்றாநாதரை வணங்கி செல்லுங்கள்.

Leave a Comment