எண்பதுகளில் புகழ்பெற்று விளங்கியவர் நடிகர் ராகவேந்தர். டி எஸ் ராகவேந்தர் என்று சொன்னால்தான் சினிமா ரசிகர்களுக்கு தெரியும். வைதேகி காத்திருந்தாளில் ரேவதி கதாபாத்திரத்தில் வருவாரே அவர்தான்.
இவர் சிந்து பைரவி உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார். இவர் ஒரு இசையமைப்பாளரும் கூட.
இசைஞானி இளையராஜாவின் பல பாடல்களை இவர் பாடியுள்ளார். பெரும்பாலும் யாருக்கும் தெரியாத விசயம். அழகு மலராட பாடலில் ஜதி சொல்லுவதில் இருந்து, வருஷம் 16 படத்தில் வரும் ஏய் அய்யாச்சாமி உள்ளிட்ட பாடல், தனிப்பாடலாக உச்சஸ்தாயியில் பாடிய பாக்கு கொண்டா வெத்தலை கொண்டா உள்ளிட்ட சக்கரை தேவன் பாடலை பாடியுள்ளார்.
திருமதி பழனிச்சாமி படத்தில் இடம்பெற்ற அம்மன் கோவில் வாசலிலே என்ற பாடலையும் பாடியுள்ளார். போற போக்கில் யதார்த்தமாக பாடுகிற டி.எஸ் ராகவேந்தர் ஒரு பின்னணி பாடகர் என்பது பலரும் அறிந்திராதது.
இவரது மகள் கல்பனா ராகவேந்தரும் ஒரு பின்னணி பாடகி என்பது குறிப்பிடத்தக்கது. சூப்பர் சிங்கர் உள்ளிட்ட போட்டிகளில் நடுவராகவும் பங்கேற்றுள்ளார்.
வயோதிகம் காரணமாக எந்த ஒரு சினிமா நிகழ்விலும் இவர் தற்போது பங்கேற்பதில்லை