‘சீதப் புனலாடி சிற்றம் பலம்பாடி”என்று மாணிக்கவாசகர் திருவெம்பாவையில் போற்றும் ”சீதப்
புனல்” என்னும் ”சீதளா தீர்த்தம்”
இராமநாதபுரம் உத்தரகோசமங்கை மங்களாம்பிகை உடனுறை மங்களநாத சுவாமி திருக்கோயிலின் அருகில் சிறிது தூரத்தில் மங்கள மகா காளி என்ற பெயரில் மிகப்புராதனமான சுயம்பு மகா வராஹி அம்மன் கோயில் உள்ளது. இந்த திருக்கோயிலுக்கு உரிய
தீர்த்தமாகும்.
நம் உத்தரகோசமங்கை மங்களாம்பிகை உடனுறை மங்களநாத சுவாமி திருக்கோயில் ”தீர்த்தவாரி”இந்த ”சீதப் புனல்” என்னும் சீதளா தீர்த்தத்தில்தான் இன்றுவரை நடைபெற்று வருகிறது.
அதுமட்டுமல்ல இந்த உத்தரகோசமங்கை மகா வராஹி அம்மன் [ஆதி வராஹி]சுயமபுவாக தோன்றி
ஆதிகாலத்தில் இருந்தே அருள்பாலித்துவருகிறாள் என்பது
குறிப்பிடத்தக்கது.
வராஹி அம்மன் அபிஷேகத்துக்கும் சீதளா தீர்த்த நீர் பயன்படுவது அதன் மகிமையை காட்டுகிறது.இதனைத்தான் மாணிக்கவாசகர் தமது
திருவெம்பாவையில் பதிவு செய்து உள்ளார்.இந்த சுயம்பு வராஹி அம்மனை ஆதி வராஹி என்றே போற்றுகிறார்கள்.மங்கை மாகாளி அம்மன் என்பதும் இவளை அழைக்கும் திருநாமத்தில் ஒன்று.
இந்த வராஹி மிகவும் விசேஷமானவள் இவளை வணங்கினால் அனைத்து பிரச்சினைகளும் தீராத பல பிரச்சினைகளும் தீரும். பல பிரபலங்கள் இங்கு வந்து வராஹியை வணங்கி ரகசியமாக பூஜை செய்துவிட்டு செல்வது குறிப்பிடத்தக்கது.