பங்குனி உத்திரம்- திருப்புல்லாணி ஆதி ஜெகநாதபெருமாள் தேரோட்ட விழா

By Staff

Published:

4d15f98f2fd3173c2fba81ee09344fb4

பங்குனி உத்திர திருநாள் முருகனுக்கு உகந்த நாள் ஆக உள்ளது. பங்குனி உத்திரத்தன்று அனைத்து முருகன் கோவில்களிலும் விசேஷ வழிபாடுகள் சிறப்பாக நடக்கும். அதே போல் பங்குனி உத்திரத்தன்றுதான் சபரி சாஸ்தா ஐயப்பன் பிறந்த நாளாகவும் கொண்டாடப்படுகிறது. சில ஊர்களில் பங்குனி உத்திரம் வைபவங்கள் பெருமாள் கோவில்களில் உற்சவ விழாவாக நடத்தப்படுகிறது.

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் 108 திவ்யதேசங்களில் 44வது திவய்தேசமான திருப்புல்லாணியில் ஆதி ஜெகநாதபெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி , சித்திரை பிரமோற்சவ விழாக்கள் நடக்கிறது.

தசரத சக்கரவர்த்தியின் வேண்டுதலின் பேரில் ராமர் அவருக்கு மகனாக பிறந்தார். இங்குள்ள ஆதி ஜெகநாதரை வேண்டியே தசரத சக்கரவர்த்திக்கு ராமர் பிறந்ததாக ஐதீகம். சீதையை மீட்பதற்கு முன் இலங்கை செல்ல திருப்புல்லாணி வந்த ராமபிரான் இங்கு தர்ப்பை புல்லில் படுத்திருந்து ஆலோசனை நடத்துகிறார். புல்லில் ராமபிரான் படுத்து இருந்ததால் புல்லணை என்ற பெயர் திருப்புல்லணை என்ற பெயராக இவ்வூருக்கு மாறியது. இறுதியில் அதுவும் மறுவி திருப்புல்லாணியாக மாறியது.

இங்குள்ள ஆதி ஜெகநாதருக்கு ஒரு வாரம் திருவிழா நடைபெற்று பங்குனி உத்திரத்தன்று பெரிய தேர்த்திருவிழா நடத்தப்படும். அடுத்ததாக சித்திரையில் இங்குள்ள ராமபிரானுக்கு தேர்த்திருவிழா நடைபெறும்.

இந்த விசேஷங்களில் கலந்து பெருமாளின் அனுக்கிரஹம் பெறுவீர்.

Leave a Comment